பொது செய்தி

தமிழ்நாடு

சம்பா விவசாயிகளுக்கு அரசு வேண்டுகோள்

Added : செப் 24, 2021
Share
Advertisement
சென்னை:பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், சம்பா பருவ பயிர்களை காப்பீடு செய்யும்படி, விவசாயிகளுக்கு, தமிழகஅரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.அரசு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம், சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகள் நலனில் அக்கறை கொண்டுள்ள, இந்த அரசு, நடப்பாண்டு சம்பா பருவத்தில்,

சென்னை:பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், சம்பா பருவ பயிர்களை காப்பீடு செய்யும்படி, விவசாயிகளுக்கு, தமிழகஅரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அரசு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம், சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகள் நலனில் அக்கறை கொண்டுள்ள, இந்த அரசு, நடப்பாண்டு சம்பா பருவத்தில், இத்திட்டத்தை செயல்படுத்த, ஆக., 26ல் அரசாணை வெளியிட்டது.சம்பா பருவத்தில், நெல், பருத்தி, மக்காச்சோளம், வெங்காயம் ஆகிய பயிர்கள் காப்பீடு செய்ய, அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

கடன் பெறும் விவசாயிகள், தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு வங்கிகள் மற்றும்தேசிய வங்கிகளிலும், கடன் பெறா விவசாயிகள், 'பொது சேவை மையங்கள்' வழியாகவும், நேற்று முன்தினம் முதல், மத்திய அரசின், தேசிய பயிர் காப்பீடு இணையதளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.காப்பீடு செய்ய ஏதுவாக, இரண்டு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, விவசாயிகள் சம்பா பருவ பயிர்களை காப்பீடு செய்வது குறித்தான, நடப்பு தகவல்களை, 'உழவன்' செயலி மற்றும் சம்பந்தப்பட்ட, மாவட்ட மற்றும் வட்டார வேளாண் துறை அலுவலர்களை சந்தித்து, தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X