இந்திய கூட்டுறவு மாநாட்டில் இன்று பேசுகிறார் அமித் ஷா

Added : செப் 24, 2021
Share
Advertisement
புதுடில்லி:டில்லியில் இன்று நடக்கும் இந்திய கூட்டுறவு மாநாட்டில், மத்திய கூட்டுறவு துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்ற உள்ளார்.நாட்டின் கூட்டுறவு இயக்கத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்குடன், மத்திய அரசு ஜூலையில், கூட்டுறவுக்கென தனி அமைச்சகத்தை ஏற்படுத்தியது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, கூட்டுறவு அமைச்சர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்

புதுடில்லி:டில்லியில் இன்று நடக்கும் இந்திய கூட்டுறவு மாநாட்டில், மத்திய கூட்டுறவு துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்ற உள்ளார்.நாட்டின் கூட்டுறவு இயக்கத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்குடன், மத்திய அரசு ஜூலையில், கூட்டுறவுக்கென தனி அமைச்சகத்தை ஏற்படுத்தியது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, கூட்டுறவு அமைச்சர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று டில்லியில் முதன் முறையாக இந்திய கூட்டுறவு மாநாடு நடைபெற உள்ளது. இதில், அமித் ஷா பங்கேற்று, மத்திய அரசின் கூட்டுறவு கொள்கைகள், செயல்படுத்த உள்ள திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து உரையாற்ற உள்ளார்.

இந்த மாநாட்டில் சர்வதேச கூட்டுறவு சங்க கூட்டமைப்பு தலைவர் ஏரியல் குவார்கோ, மத்திய கூட்டுறவு துறை இணையமைச்சர் பி.எல்.வர்மா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். கூட்டுறவு அமைப்புகளைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்டோர் இம்மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

மேலும், 110 நாடுகளில் உள்ள 30 லட்சத்திற்கும் அதிகமான கூட்டுறவு அமைப்புகளைச் சேர்ந்த எட்டு கோடிக்கும் மேற்பட்டோர், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X