பொது செய்தி

தமிழ்நாடு

1 லட்சம் விவசாய இணைப்புக்கு 350 - 500 மெகா வாட் மின்சாரம் தேவை

Added : செப் 24, 2021
Share
Advertisement
சென்னை:சமீபத்தில் வழங்கப்பட்டுள்ள ஒரு லட்சம் விவசாய இணைப்புகளுக்கு மின் வினியோகம் செய்ய, 350 - 500 மெகா வாட் மின்சாரம் தேவை என மதிப்பிடப்பட்டு உள்ளது.தமிழகம் முழுதும் தினமும் சராசரியாக, 14 ஆயிரம் மெகா வாட்டாக உள்ள மின் தேவை, கோடைக் காலத்தில் 15 ஆயிரம் மெகா வாட்டை தாண்டுகிறது. மின் வாரியம், விவசாயத்திற்கு இலவசமாக மின் வினியோகம் செய்கிறது.நடப்பு நிதியாண்டில் ஒரு லட்சம்

சென்னை:சமீபத்தில் வழங்கப்பட்டுள்ள ஒரு லட்சம் விவசாய இணைப்புகளுக்கு மின் வினியோகம் செய்ய, 350 - 500 மெகா வாட் மின்சாரம் தேவை என மதிப்பிடப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுதும் தினமும் சராசரியாக, 14 ஆயிரம் மெகா வாட்டாக உள்ள மின் தேவை, கோடைக் காலத்தில் 15 ஆயிரம் மெகா வாட்டை தாண்டுகிறது. மின் வாரியம், விவசாயத்திற்கு இலவசமாக மின் வினியோகம் செய்கிறது.

நடப்பு நிதியாண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் துவக்கி வைத்தார். ஒரு விவசாய இணைப்புக்கு குறைந்தது, 5 குதிரை திறன் மோட்டார் பம்ப் உடைய இணைப்பு வழங்கப்படுகிறது.'தத்கல்' எனப்படும் விரைவு திட்டத்தில், 15 குதிரை திறன் மோட்டார் பம்ப் வரை இணைப்பு வழங்கப்படுகிறது.

தற்போது, 5 குதிரை திறன் மோட்டார் பம்ப் இயக்க, 3.5 கிலோ வாட் மின்சாரம் தேவைப்படும். 1,000 கிலோ வாட் என்பது, 1 மெகா வாட் என கணக்கிடப்படுகிறது.இதனால், ஒரு லட்சம் விவசாய இணைப்புகளுக்கு மின் வினியோகம் செய்யும் பணிகளை துவங்கினால், தினமும் 350 முதல் 500 மெகா வாட் வரை மின்சாரம் கூடுதலாக தேவைப்படும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X