எல்லை பிரச்னைக்கு சீனாவின் தன்னிச்சையான செயலே காரணம்: இந்தியா

Updated : செப் 26, 2021 | Added : செப் 24, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி:'கிழக்கு லடாக் எல்லை பிரச்னைக்கு சீனாவின் தன்னிச்சையான செயலே காரணம்' என, இந்தியா தெரிவித்துள்ளது. கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்தாண்டு எல்லை தாண்டி வந்த சீன ராணுவத்தினருக்கும், நம் ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், நம் வீரர்கள்20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 35 பேர் இறந்ததாக அமெரிக்க உளவுத் துறை
எல்லை பிரச்னை, சீனா, தன்னிச்சை, காரணம்: இந்தியா

புதுடில்லி:'கிழக்கு லடாக் எல்லை பிரச்னைக்கு சீனாவின் தன்னிச்சையான செயலே காரணம்' என, இந்தியா தெரிவித்துள்ளது.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்தாண்டு எல்லை தாண்டி வந்த சீன ராணுவத்தினருக்கும், நம் ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், நம் வீரர்கள்20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 35 பேர் இறந்ததாக அமெரிக்க உளவுத் துறை தெரிவித்திருந்தது. இந்நிலையில், 'கல்வான் மோதலுக்கு இந்தியா எல்லை தாண்டி வந்தது தான் காரணம்' என, சீன வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறியிருந்தார்.

இது குறித்து நம் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியதாவது: கல்வான் மோதல் தொடர்பான சீனாவின் குற்றச்சாட்டை இந்தியா கடுமையாக மறுக்கிறது. எல்லைக் கோட்டில் இந்தியா தெளிவாக உள்ளது.சீனா தான், இரு தரப்பு ஒப்பந்தங்களை மீறி, ஆத்திரமூட்டும் வகையில் எல்லை தாண்டி வந்து மோதல் ஏற்பட வழி வகுத்தது. இதனால் எல்லை பகுதியில் அமைதி குலைந்து பதற்றம் ஏற்பட்டது. அத்துடன் இரு தரப்பு உறவும் பாதிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
25-செப்-202105:53:23 IST Report Abuse
Kasimani Baskaran சுதந்திரம் கொடுக்கும் பொழுது உருப்படியான சீன - இந்திய எல்லையை நிர்னயிக்காமல் பிரிட்டன் இந்தியாவை விட்டு வெளியேறியது. காங்கிரஸ் கட்சி அகிம்சை பேசிக்கொண்டு சீனா சொன்னதை / ஆக்கிரமித்தது போக மீதி இருந்ததை 'லைன் ஆப் ஆக்சுவல் கண்ட்ரோல்' என்று ஆரம்பித்து இன்றுவரை சீனக்காமடி தொடர்கிறது. சீனா அதன் இராணுவ பலத்தை அதிகரித்த பொழுதெல்லாம் இந்தியாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி இராணுவத்த்தை நவீனப்படுத்தாமல் ஊழல் செய்வதில் மட்டுமே கவனம் செலுத்தியது. அது தவிர இரகசியமாக தனிப்பட்ட முறையில் சீன கம்முனிஸ்ட் கட்சியுடன் தகவல் பறிமாறிக்கொண்டு இருந்தது. இன்னும் கூட இராணுவத்தை நவீனப்படுத்த பாஜக அரசு எடுக்கும் எந்தவித நடவடிக்கைக்கும் காங்கிரஸ் ஆதரவு கொடுப்பது கிடையாது - மாறாக முட்டுக்கட்டையே போடுகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X