பொது செய்தி

தமிழ்நாடு

20 ஆண்டு 'அரியர்' தேர்வு அண்ணா பல்கலை வாய்ப்பு

Updated : செப் 26, 2021 | Added : செப் 24, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
சென்னை : அண்ணா பல்கலை யின் இணைப்பு இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 20 ஆண்டுகள் முன் வரை படித்து, 'அரியர்' பாடம் உள்ளவர்களுக்கு பட்டப் படிப்பை முடிக்க, சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.அண்ணா பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேசன் செய்திக்குறிப்பு:அண்ணா பல்கலை மற்றும் அதன் இணைப்பு கல்லுாரி களின் மாணவர்களில், குறிப்பிட்ட கால வரையறைக்குள் தங்களுக்கான
20 ஆண்டு  அரியர்' தேர்வு  அண்ணா பல்கலை வாய்ப்பு

சென்னை : அண்ணா பல்கலை யின் இணைப்பு இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 20 ஆண்டுகள் முன் வரை படித்து, 'அரியர்' பாடம் உள்ளவர்களுக்கு பட்டப் படிப்பை முடிக்க, சிறப்பு சலுகை
அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேசன் செய்திக்குறிப்பு:
அண்ணா பல்கலை மற்றும் அதன் இணைப்பு கல்லுாரி களின் மாணவர்களில், குறிப்பிட்ட கால வரையறைக்குள் தங்களுக்கான தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, பட்டம் பெறாதவர்களுக்கு, சிறப்பு சலுகையாக தேர்வில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படுகிறது.

இதன்படி, 20௦1 - -02ம் கல்வி ஆண்டில், மூன்றாவது செமஸ்டர் தேர்வு படித்த மாணவர்கள் முதல், தற்போது வரை படித்தவர்களுக்கு இந்த சலுகை அளிக்கப்படுகிறது.
அவர்கள், அண்ணா பல்கலையின் நவ., - டிச., தேர்வில் பங்கேற்கலாம். இதற்கு சிறப்பு கட்டணமாக மாணவர்கள் 5,000 ரூபாய் செலுத்த வேண்டும்.அத்துடன், வழக்கமான தேர்வு கட்டணமும் செலுத்த வேண்டும். இந்த சலுகை திட்டத்தில் தேர்வு எழுத விரும்புவோர், இன்று முதல் அக்., 4க்குள், அண்ணா பல்கலை தேர்வு பிரிவு இணையதள இணைப்பில் தங்கள் விபரங்களை பதிவு
செய்யலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
26-செப்-202113:32:23 IST Report Abuse
கல்யாணராமன் சு. இந்த அறிவிப்பிற்கு என்ன காரணம் என்பதையும் விளக்கினால் பயனுள்ளதாக இருக்கும் ...... 20 வருடங்களாக தேர்வு எழுதி தேர்ச்சி அடைய முடியாதவர்கள்/விருப்பமில்லாதவர்கள் கேட்டிருப்பார்களோ ? இந்த தேர்வுக்கான தேர்வு விதிமுறைகள் (பாட திட்டம், தேர்வு நடைமுறை போன்றவை) என்ன என்பதையும் விளக்கினால் நன்று.
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
25-செப்-202114:13:17 IST Report Abuse
Duruvesan Fail ஆன அனைவருக்கும் என்ஜினீயர் பட்டம் மற்றும் வேலையும் குடுத்த துணை வேந்தர், வேருங்கால முதல்வர், யேசப்பாவின் சீடர் உடையா அண்ணன் வாழ்க
Rate this:
Cancel
THANGARAJ - CHENNAI,இந்தியா
25-செப்-202113:56:52 IST Report Abuse
THANGARAJ 10-20 வருடங்களுக்கு முன்பு முடித்தவர்கள் தற்போது ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டு வாழ்க்கையை நடத்தி கொண்டு இருப்பார்கள். தற்போதைய பரிட்சையில் என்ன எழுதுவார்? இளமை பருவத்தில் படிக்க முடியாதவர், தற்போது மீண்டும் புக் எடுத்து படித்து மீண்டும் பாஸ் பண்ணுவாரா? அல்லது பெயில் ஆனால் என்ன செய்வார்? இந்த என்ஜினீயர் டிகிரி வாங்கி என்ன பயன்? அவர் வேலை செய்து கொண்டு இருக்கும் கொம்பனியில் சம்பள உயர்வு கொடுப்பார்களா? அண்ணா பல்கலை கழகம் வருமானம் வருவதற்கு ஒரு வழி செய்கிறது அவ்வளவு தான். 15-20 வருட பழைய மாணவர்களுக்கு ஓபன் ( BOOK) புக் எக்ஸாம் என வெளிப்படையாக அறிவிப்பார்களா? தனது மகன் / மகளை இஞ்சனீரிங் படிக்க வைக்க முயற்சி செய்து கொண்டு இருப்பார்கள் இந்திய இஞ்சினீரிங் படிப்பு வெற்றி பெற புதிய பாட திட்டங்கள், நிறைய பரிசோதனை செய்முறை பய்ற்சிகள் வேண்டும் . மேலும் எஞ்சினீரிங் கல்லூரிகள் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும். தனியார் இன்ஜினியரிங் கல்லூரிக்காக அரசு ஏழை மாணவர் என கூறி பீஸ் (Tution Fees) மானியமாக தரக்கூடாது. அதற்க்கு பதிலாக தரமான புத்தகம், செய்முறை கருவிகள், கம்ப்யூட்டர் போன்றவை தர பரிசீலிக்க வேண்டும். 20 வருட பழைய கல்லூரியில் படிக்க அணைத்து வித மான பீஸ் குறைக்க பட வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X