சீறிய சென்னை 'சிங்கங்கள்'; கோஹ்லி அணி ஏமாற்றம்

Updated : செப் 25, 2021 | Added : செப் 24, 2021
Share
Advertisement
சார்ஜா: ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தியது.எமிரேட்சில், 14வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. சார்ஜாவில் நடந்த லீக் போட்டியில் சென்னை, பெங்களூரு அணிகள் மோதின. பாலைவன மணல் புயல் காரணமாக போட்டி துவங்குவதில் தாமதமானது. 'டாஸ்' வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, 'பீல்டிங்' தேர்வு செய்தார்.பெங்களூரு அணிக்கு கேப்டன் விராத்

சார்ஜா: ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தியது.



latest tamil news




எமிரேட்சில், 14வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. சார்ஜாவில் நடந்த லீக் போட்டியில் சென்னை, பெங்களூரு அணிகள் மோதின. பாலைவன மணல் புயல் காரணமாக போட்டி துவங்குவதில் தாமதமானது. 'டாஸ்' வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
பெங்களூரு அணிக்கு கேப்டன் விராத் கோஹ்லி, தேவ்தத் படிக்கல் ஜோடி சூப்பர் துவக்கம் தந்தது. ஜடேஜா பந்தை சிக்சருக்கு அனுப்பிய படிக்கல், தீபக் சகார் பந்தை பவுண்டரிக்கு விரட்டி அரை சதத்தை பதிவு செய்தார். ஜடேஜா பந்தில் பவுண்டரி அடித்த கோஹ்லி, ஐ.பி.எல்., அரங்கில் தனது 41வது அரைசதமடித்தார். முதல் விக்கெட்டுக்கு 111 ரன் சேர்த்த போது பிராவோ பந்தில் கோஹ்லி (53) அவுட்டானார்.

ஷர்துல் தாகூர் வீசிய 17வது ஓவரில் டிவிலியர்ஸ் (12), படிக்கல் (70) அவுட்டாகினர். டிம் டேவிட் (1), மேக்ஸ்வெல் (11), ஹர்ஷல் படேல் (3) நிலைக்கவில்லை. பெங்களூரு அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 156 ரன் எடுத்தது. ஹசரங்கா (1) அவுட்டாகாமல் இருந்தார்.


நல்ல துவக்கம்:


எட்டக்கூடிய இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட், டுபிளசி ஜோடி நல்ல துவக்கம் தந்தது. சிராஜ், ஹசரங்கா, ஹர்ஷல் படேல் பந்தில் தலா ஒரு பவுண்டரி அடித்தார் ருதுராஜ். மறுமுனையில் அசத்திய டுபிளசி, நவ்தீப் சைனி பந்தில் 2 சிக்சர், 2 பவுண்டரி விளாசினார். முதல் விக்கெட்டுக்கு 71 ரன் சேர்த்த போது யுவேந்திர சகால் 'சுழலில்' ருதுராஜ் (38) சிக்கினார். மேக்ஸ்வெல் பந்தில் டுபிளசி (31) அவுட்டானார்.


latest tamil news


பவுண்டரி அடித்து தனது ரன் கணக்கை துவக்கிய அம்பதி ராயுடு, மேக்ஸ்வெல் பந்தை சிக்சருக்கு அனுப்பினார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த மொயீன் அலி, சகால், ஹசரங்கா பந்தில் தலா ஒரு சிக்சர் அடித்தார். ஹர்ஷல் படேல் பந்தில் மொயீன் (23), ராயுடு (32) அவுட்டாகினர். ஹசரங்கா வீசிய 17வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார் ரெய்னா. சிராஜ் வீசிய 18வது ஓவரில் 2 பவுண்டரி அடித்த கேப்டன் தோனி வெற்றிக்கு வித்திட்டார்.

சென்னை அணி 18.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 157 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ரெய்னா (17), கேப்டன் தோனி (11) அவுட்டாகாமல் இருந்தனர். இந்த வெற்றியை அடுத்து, 7 வெற்றி 2 தோல்விகளுடன் 14 புள்ளிகளை பெற்றுள்ள சென்னை அணி, புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X