பொது செய்தி

தமிழ்நாடு

மானாமதுரை வழியே பாசஞ்சர் ரயில்களை இயக்க கோரிக்கை

Added : செப் 25, 2021
Share
Advertisement
மானாமதுரை : மானாமதுரை மார்க்கமாக இயக்கப்பட்டு கொரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட பாசஞ்சர் ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.மானாமதுரை வழியாக, கொரோனா தொற்றுக்கு முன்னர் ராமேஸ்வரத்திலிருந்து மதுரைக்கும், விருதுநகரில் இருந்து திருச்சிக்கும் என தினமும் ஏராளமான பயணிகள் ரயில்கள் சென்று வந்தன. அரசு அலுவலர்கள்,

மானாமதுரை : மானாமதுரை மார்க்கமாக இயக்கப்பட்டு கொரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட பாசஞ்சர் ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மானாமதுரை வழியாக, கொரோனா தொற்றுக்கு முன்னர் ராமேஸ்வரத்திலிருந்து மதுரைக்கும், விருதுநகரில் இருந்து திருச்சிக்கும் என தினமும் ஏராளமான பயணிகள் ரயில்கள் சென்று வந்தன. அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினர் பயன்படுத்தி வந்தனர்.கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கொரானா தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட இந்த ரயில்களில் தற்போது ராமேஸ்வரத்திலிருந்து திருச்சிக்கு மட்டும் பாசஞ்சர் ரயில் இயக்கப்படுகிறது.

ரயில் பயணிகள் கூறுகையில்,கொரோனா தொற்றுக்கு முன்னர் 4 மார்க்கங்களிலும் இயக்கப்பட்டு வந்த பாசஞ்சர் ரயில்களால் ஏராளமானோர் பயன் பெற்று வந்தனர். தற்போது அந்த ரயில்கள் இயக்கப்படாததால் பஸ்களில் அதிக கட்டணம் செலுத்தி செல்ல வேண்டியுள்ளது. தெற்கு ரயில்வே நிர்வாகம் மானாமதுரை மார்க்கமாக இயக்கபட்ட ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X