பொது செய்தி

தமிழ்நாடு

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வங்கக்கடலில் மீனவர்களுக்கு தடை

Added : செப் 25, 2021
Share
Advertisement
சென்னை:வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால், மீனவர்கள் நான்கு நாட்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.சென்னை வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி கீதா வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும். சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.நீலகிரி, கோவை, சேலம்,
 குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வங்கக்கடலில் மீனவர்களுக்கு தடை

சென்னை:வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால், மீனவர்கள் நான்கு நாட்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி கீதா வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும். சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.நீலகிரி, கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல், தேனி, திருப்பத்துார், வேலுார், திருவண்ணாமலை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும்.

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக இன்று அதிகாலை வலுப்பெறும். பின், வட மேற்கு திசையில், ஒடிசாவை நோக்கி நகரக்கூடும்.இதன் காரணமாக, தென் மேற்கு மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல், குமரிக் கடல் பகுதிகளில் வரும் 28ம் தேதி வரை, மணிக்கு 55 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும்.

எனவே, நான்கு நாட்களுக்கு மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக திருப்பூரில் 18 செ.மீ., மழை பெய்துள்ளது. ஏத்தாப்பூர் 11; நீடாமங்கலம் 9 செ.மீ., மழை பெய்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X