பொது செய்தி

தமிழ்நாடு

உழவர் உதவி மைய தொடக்க விழா

Added : செப் 25, 2021
Share
Advertisement
கல்லல் : கல்லல் ஒன்றியம் வேப்பங்குளம் ஊராட்சியில் உழவர் உதவி மையத்தை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தொடங்கி வைத்தார்.வேளாண்துறை, சமூக ஆர்வலர்கள் பங்களிப்புடன் உழவர் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் நோக்கம் விவசாயிகள் இருக்கும் இடத்திற்கே விவசாயத்திற்கு தேவையான இடு பொருட்கள், உற்பத்தி பொருட்கள், சந்தைப்படுத்துதல் ஆகியவற்றிற்கு வழிகாட்டியாக இருப்பதேயாகும்.

கல்லல் : கல்லல் ஒன்றியம் வேப்பங்குளம் ஊராட்சியில் உழவர் உதவி மையத்தை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தொடங்கி வைத்தார்.

வேளாண்துறை, சமூக ஆர்வலர்கள் பங்களிப்புடன் உழவர் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் நோக்கம் விவசாயிகள் இருக்கும் இடத்திற்கே விவசாயத்திற்கு தேவையான இடு பொருட்கள், உற்பத்தி பொருட்கள், சந்தைப்படுத்துதல் ஆகியவற்றிற்கு வழிகாட்டியாக இருப்பதேயாகும். விவசாயிகள் குறித்த முகவரி, மற்றும் விபரங்கள் சேகரிக்கப்படும். விளை நிலங்கள் குறித்த தன்மை, என்ன பயிரிட்டால் லாபம் கிடைக்கும், வானிலை விபரங்கள் அனைத்தும் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.அரசு வழங்கும் திட்டங்கள், அதில் பயன் பெற வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் 300 விவசாயிகள் பதிவு செய்து 1,700 ஏக்கர் நிலங்கள் பயன் பெறும். முன்னோடி விவசாயிகள் தரிசு நிலங்களை மேம்படுத்தி விவசாயம் செய்யும் பணிகளை கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டார்.நிகழ்ச்சியில் வேளாண் இணை இயக்குநர் வெங்கடேஸ்வரன், சமூக ஆர்வலர் திருச்செல்வம் உட்பட வேளாண் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X