பொது செய்தி

தமிழ்நாடு

முதுகுளத்தூரில் தொழிற்சாலை வர்த்தக சங்கம் கோரிக்கை

Added : செப் 25, 2021
Share
Advertisement
முதுகுளத்துார் : முதுகுளத்துாரில் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்று மாநில வர்த்தக சங்க துணைத்தலைவர் கருப்புசாமி கோரிக்கை விடுத்தார்.அவர் கூறியதாவது:ராமநாதபுரம் மாவட்டத்தில் கண்மாய், வரத்துகால்வாய்களில் வளர்ந்துள்ள கருவேல் மரங்களை அகற்றி வைகை,குண்டாறு இணைக்கப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் தண்ணீரை விவசாயத்திற்கு முழுவதுமாக பயன்படுத்த வேண்டும்.முதுகுளத்துார்

முதுகுளத்துார் : முதுகுளத்துாரில் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்று மாநில வர்த்தக சங்க துணைத்தலைவர் கருப்புசாமி கோரிக்கை விடுத்தார்.

அவர் கூறியதாவது:ராமநாதபுரம் மாவட்டத்தில் கண்மாய், வரத்துகால்வாய்களில் வளர்ந்துள்ள கருவேல் மரங்களை அகற்றி வைகை,குண்டாறு இணைக்கப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் தண்ணீரை விவசாயத்திற்கு முழுவதுமாக பயன்படுத்த வேண்டும்.முதுகுளத்துார் தொகுதி முழுவதும் ரயில் போக்குவரத்து குறிப்பாக பரமக்குடியில் இருந்து முதுகுளத்துார்,சாயல்குடி, விளாத்திகுளம் வழியாக துாத்துக்குடி வரை ரயில் பாதை அமைக்க வேண்டும். இதனால் வணிகமும் வளம் பெறும்.ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தண்ணீர் தட்டுபாடின்றி கிடைக்க வேண்டும். வியாபாரிகள் அனைவரையும் வணிகர் நல வாரியத்தில் இணைத்து வியாபாரிகள் பயன்பெறவும், பாதுகாப்பை வணிகர் நல வாரியம் உறுதி செய்ய வேண்டும்,என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X