பொது செய்தி

தமிழ்நாடு

மனிதநேய மையத்தில் படித்த 18 பேர் வெற்றி

Added : செப் 25, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:ஐ.ஏ.எஸ்., தேர்வில், மனிதநேய அறக்கட்டளையில் படித்த 18 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இதுகுறித்து, மனிதநேய அறக்கட்டளைத் தலைவர் சைதை துரைசாமி அறிக்கை:கடந்த 2020ம் ஆண்டு 796 குடிமைப் பணி காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த ஆண்டு மே மாதம் நடக்கவிருந்த முதல்நிலைத் தேர்வு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, 2020 அக்., 4ல் நடந்தது. அதே மாதம் 23ம் தேதி தேர்வு முடிவு
 மனிதநேய மையத்தில்  படித்த 18 பேர் வெற்றி

சென்னை:ஐ.ஏ.எஸ்., தேர்வில், மனிதநேய அறக்கட்டளையில் படித்த 18 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதுகுறித்து, மனிதநேய அறக்கட்டளைத் தலைவர் சைதை துரைசாமி அறிக்கை:கடந்த 2020ம் ஆண்டு 796 குடிமைப் பணி காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த ஆண்டு மே மாதம் நடக்கவிருந்த முதல்நிலைத் தேர்வு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, 2020 அக்., 4ல் நடந்தது. அதே மாதம் 23ம் தேதி தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் நடந்த முதன்மைத் தேர்வு முடிவுகள் மார்ச் 23ல் வெளியிடப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு நேர்முகத் தேர்வு ஆக., 2 முதல் செப்., 23 வரை நடந்தது.நேற்று தேர்வு முடிவுகள் வெளியாகின. மனிதநேய மையம் வழியாக நேர்முகத் தேர்வில் பங்கேற்ற மாணவ - மாணவியரில், எட்டு மாணவியர், 10 மாணவர்கள் என, மொத்தம் 18 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

கோவையைச் சேர்ந்த நாராயண சர்மா 33வது இடம்; தென்காசியைச் சேர்ந்த சண்முகவள்ளி 108வது இடம்; கோவையை சேர்ந்த சுவாதிஸ்ரீ, 126வதுஇடம்; சென்னையை சேர்ந்த கேத்தரின் சரண்யா 157வது இடம் பெற்றுள்ளனர்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.வேறு இடங்களில் படித்தவர்களில், மதுரை டாக்டர் முகமது ரிஸ்வின், 589வது இடம் பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
27-செப்-202107:27:29 IST Report Abuse
NicoleThomson வாழ்த்துக்கள் துரைசாமி ஐயா அவர்களே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X