கோவில் நகைகளை உருக்க பா.ஜ., எதிர்ப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கோவில் நகைகளை உருக்க பா.ஜ., எதிர்ப்பு

Added : செப் 25, 2021
Share
சென்னை:'கோவில் நகைகளை உருக்க முற்படுவதைக் கைவிட வேண்டும்' என, தமிழக பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் எம்.பி., கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:கோவில்களில் ஆண்டவனுக்கு வேண்டுதல் அடிப்படையிலும், நிறைவேறிய வேண்டுதலுக்காகவும், மாமன்னர் முதல், சாதாரண குடிமகன் வரை, அவரவர் விருப்பம், கலாசாரப்படி வழங்கிய நகைகளை, தமிழக அரசு உருக்க முடிவு எடுத்திருப்பது ஏற்கத்தக்கது

சென்னை:'கோவில் நகைகளை உருக்க முற்படுவதைக் கைவிட வேண்டும்' என, தமிழக பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் எம்.பி., கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:கோவில்களில் ஆண்டவனுக்கு வேண்டுதல் அடிப்படையிலும், நிறைவேறிய வேண்டுதலுக்காகவும், மாமன்னர் முதல், சாதாரண குடிமகன் வரை, அவரவர் விருப்பம், கலாசாரப்படி வழங்கிய நகைகளை, தமிழக அரசு உருக்க முடிவு எடுத்திருப்பது ஏற்கத்தக்கது அல்ல.மிகப் பெரிய அநீதியும், வரலாற்று கொடுமையும் தமிழக கோவில்களுக்கு நடக்கின்றன. நினைத்து பார்க்க முடியாத கொடூரம் இது. மிகப் பெரிய வஞ்சனை இது.

ஆப்கானிய தலிபான்களின் பாமியான் சிலை தகர்ப்புக்கும், இந்த திராவிட தலிபான்களின் நகை ஒழிப்புக்கும் வித்தியாசம் ஏதுமில்லை. ஹிந்து சமய கோவில்களின் இருப்பிடமாக கருதப்படும் மாநிலம் நம் தமிழகம்.தற்போதைய ஆட்சியின் தலைமை, மதச்சார்பற்ற அரசு என்ற முகமூடியை போட்டுக் கொண்டு, ஹிந்து மத கலாசார பண்பாட்டுச் சின்னங்களாக கருதப்படும் கோவில் நகைகளை உருக்க முற்படுவதை கைவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X