பொது செய்தி

இந்தியா

தமிழகம் உட்பட 4 மாநிலங்களில் அமைகிறது மருத்துவ கருவி பூங்கா

Updated : செப் 25, 2021 | Added : செப் 25, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
உள்நாட்டிலேயே மருத்துவ உபகரணங்களை தயாரிப்பதை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக தமிழகம் உட்பட நான்கு மாநிலங்களில் மருத்துவ கருவிகள் பூங்காக்களை அமைக்க மத்திய அரசு கொள்கை ரீதியாக ஒப்புதல் அளித்து உள்ளது.நாட்டில் மருத்துவ வசதிகளை அதிகப்படுத்து வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. எதிர்காலத்தில் மருத்துவ கருவிகளின் அத்தியாவசியப் பயன்பாடு அதிக அளவில்
தமிழகம் உட்பட 4 மாநிலங்களில் அமைகிறது மருத்துவ கருவி பூங்கா

உள்நாட்டிலேயே மருத்துவ உபகரணங்களை தயாரிப்பதை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக தமிழகம் உட்பட நான்கு மாநிலங்களில் மருத்துவ கருவிகள் பூங்காக்களை அமைக்க மத்திய அரசு கொள்கை ரீதியாக ஒப்புதல் அளித்து உள்ளது.

நாட்டில் மருத்துவ வசதிகளை அதிகப்படுத்து வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. எதிர்காலத்தில் மருத்துவ கருவிகளின் அத்தியாவசியப் பயன்பாடு அதிக அளவில் இருக்கப் போகிறது.

இதனால் வெளிநாடுகளை மட்டுமே நம்பியிருக்காமல் உள்நாட்டிலேயே அதிக அளவில் மருத்துவ கருவிகளை தயாரிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப் பட உள்ளன. மருத்துவ துறையில் உள்ள மருந்துகள் மற்றும் மருத்துவ கருவிகள் தயாரிக்கும் துறையை மேலும் வலுப்படுத்தும் வகையில், 'மருத்துவ கருவிகள் பூங்கா' என்ற பெயரில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.எளிதாக கிடைக்கும் வகையிலும், அதேசமயம் சர்வதேச தரத்திலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாமல், நவீன தொழில்நுட்பத்துடனும் கூடிய உள்கட்டமைப்பு வசதிகளில் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கப்பட உள்ளன.
இந்த திட்டத்திற்காக 400 கோடி ரூபாய் முதற்கட்டமாக ஒதுக்கப்பட்டு குறிப்பிட்ட பூங்காவின் உள்கட்டமைப்பு திட்டச் செலவுகளில் 70 சதவீதம் வரை நிதியுதவி வழங்கப்படும்.

இத்திட்டத்தின் வாயிலாக ஒரு குறிப்பிட்ட மருத்துவ கருவி பூங்காவிற்கு மட்டும் அதிகபட்சமாக, 100 கோடி ரூபாய் வரையில் நிதியுதவி தரப்படும்.நாடு முழுதும் 16 மாநிலங்களில் இருந்து இத்திட்டத்தை கேட்டு மத்திய அரசுக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. ஆனாலும் மனிதவளம், சுற்றுச் சூழல், கொள்கை சார்ந்த திறன் மேம்பாடு ஆகியவற்றை கருத்தில் வைத்து, நான்கு மாநிலங்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, இத்தகைய மருத்துவ கருவி பூங்காக்களை தமிழகம், உத்தரபிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அமைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கொள்கை அளவிலான ஒப்புதலையும் மத்திய அரசு வழங்கி உள்ளது.
- நமது டில்லி நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ
25-செப்-202103:13:08 IST Report Abuse
Sankar Ramu வரவேற்கதக்கது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X