பிரதமர் படத்தை நீக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Added : செப் 25, 2021
Share
Advertisement
புதுடில்லி:உச்ச நீதிமன்ற மின்னஞ்சல்களில் பிரதமர் மோடியின் படத்தை நீக்கிவிட்டு உச்ச நீதிமன்ற படத்தை மாற்றி வைக்க,உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.உச்ச நீதிமன்றத்திற்கு மின்னஞ்சல் சேவைகளை, என்.ஐ.சி., எனப்படும் தேசிய தகவல் மையம் வழங்கி வருகிறது. இந்நிலையில் உச்ச நீதிமன்ற அலுவல் அதிகாரியின் மின்னஞ்சல்களின் கீழ், பிரதமர் நரேந்திர மோடியின் படத்துடன், அவரது, 'அனைவருக்கும்

புதுடில்லி:உச்ச நீதிமன்ற மின்னஞ்சல்களில் பிரதமர் மோடியின் படத்தை நீக்கிவிட்டு உச்ச நீதிமன்ற படத்தை மாற்றி வைக்க,உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத்திற்கு மின்னஞ்சல் சேவைகளை, என்.ஐ.சி., எனப்படும் தேசிய தகவல் மையம் வழங்கி வருகிறது. இந்நிலையில் உச்ச நீதிமன்ற அலுவல் அதிகாரியின் மின்னஞ்சல்களின் கீழ், பிரதமர் நரேந்திர மோடியின் படத்துடன், அவரது, 'அனைவருக்கும் வளர்ச்சி' என்பதற்கான கோஷமும் இடம் பெற்றிருந்தது. உச்ச நீதிமன்ற அதிகாரியின் மின்னஞ்சலில் பிரதமர் படம் இடம்பெற்றதால் சர்ச்சை ஏற்பட்டது.

இந்நிலையில், மின்னஞ்சல்களில் பிரதமர் மோடியின் படம் மற்றும் அவரது கோஷத்தை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக உச்ச நீதிமன்றத்தின் படத்தை மாற்றி வைக்க, தேசிய தகவல் மையத்திற்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X