கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நில அபகரிப்பு: கடும் நடவடிக்கைக்கு உத்தரவு

Added : செப் 25, 2021
Share
Advertisement
சென்னை:'நில அபகரிப்பு போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நாமக்கல் மாவட்டம், கபிலக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சங்கர் தாக்கல் செய்த மனு: பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் போட்டியிட்ட கலாராணி என்பவருக்கு எதிராக, தேர்தல் பணியாற்றினேன். தேர்ந்தெடுக்கப்பட்ட

சென்னை:'நில அபகரிப்பு போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், கபிலக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சங்கர் தாக்கல் செய்த மனு:

பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் போட்டியிட்ட கலாராணி என்பவருக்கு எதிராக, தேர்தல் பணியாற்றினேன். தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள், நில அபகரிப்பில் ஈடுபட்டனர்; அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தனர்.

இது குறித்து, நான் கேள்வி எழுப்பினேன்.என் வீட்டுக்கு வழங்கப்பட்ட தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மோட்டார் பயன்படுத்தி தண்ணீர் எடுப்பதாக கூறினர். தண்ணீர் இணைப்பு மீண்டும் வழங்கும்படி வட்டார வளர்ச்சி அதிகாரி உத்தரவிட்டார்.எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி, 2014 நவம்பரில் மனு அனுப்பினேன். மனுவை பரிசீலிக்கும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு:இரண்டு கோஷ்டிகளுக்கு இடையேயான அரசியல் விரோதத்தால், பஞ்சாயத்து தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கு எதிராக, நில அபகரிப்பு குற்றச்சாட்டுகளை மனுதாரர் எழுப்பி இருப்பது தெரிகிறது.சட்டவிரோத செயல்களில் மனுதாரரோ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளோ ஈடுபட்டுஇருந்தால், மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்தி, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நில அபகரிப்பில், மக்கள் பிரதிநிதிகள் ஈடுபடுவதை கடுமையாக அணுக வேண்டும். இத்தகைய குற்றச்சாட்டுகள் அதிகாரிகளின் கவனத்துக்கு வரும் போது, தாமதம் செய்யாமல் விசாரணை நடத்தி, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.மக்களுக்காக பணியாற்ற, பிரதிநிதிகளை தேர்வு செய்கின்றனர். பதவிக்கு வருபவர்கள் நேர்மை, அர்ப்பணிப்பு உணர்வில் கடமையாற்ற வேண்டும். இந்த வழக்கில், மனுதாரர் எழுப்பிய குற்றச்சாட்டுகளை, அதிகாரிகள் விசாரிக்கவில்லை.

அரசியல் செல்வாக்கு உடையவர்களுக்கு எதிராக, சாதாரண மக்களால் குரல் எழுப்ப முடியாது. பயந்து போய், அரசின் கவனத்துக்கு யாரும் எடுத்து வருவது இல்லை. அனாமதேய தகவல்கள் வந்தாலும், உண்மை அறிய, அதை விசாரிக்க வேண்டும்.எனவே, நில அபகரிப்பு போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நில அபகரிப்பு செயல் ஆபத்தானது மட்டுமல்ல, ஜனநாயகத்துக்கு விடப்பட்ட அச்சுறுத்தல். அதனால் தான், குற்றப் பின்னணி உடையவர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது என நீதிமன்றங்கள் கூறி வருகின்றன.இழப்பீடு பெற மனுதாரருக்கு உரிமை இல்லை. அதிகாரிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தும் எண்ணத்தில், இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. மனுதாரரின் இத்தகைய செயலை பாராட்ட முடியாது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X