பொது செய்தி

தமிழ்நாடு

காந்தி பிறந்த நாளில் பேச்சுப் போட்டி

Added : செப் 25, 2021
Share
Advertisement
சென்னை:தமிழ் வளர்ச்சி துறை சார்பில், காந்தியடிகள் பிறந்த நாளில், கல்லுாரி, பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடக்க உள்ளது.போட்டித் தலைப்புகள், போட்டி நடக்கும் நாளில் அறிவிக்கப்படும். முடிவுகள் அறிவிக்கப்பட்டு, பரிசுத் தொகையும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் கல்லுாரி மாணவர்களை, அந்தந்த கல்லுாரி முதல்வரே, இருவர் வீதம் தேர்வு செய்து

சென்னை:தமிழ் வளர்ச்சி துறை சார்பில், காந்தியடிகள் பிறந்த நாளில், கல்லுாரி, பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடக்க உள்ளது.

போட்டித் தலைப்புகள், போட்டி நடக்கும் நாளில் அறிவிக்கப்படும். முடிவுகள் அறிவிக்கப்பட்டு, பரிசுத் தொகையும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் கல்லுாரி மாணவர்களை, அந்தந்த கல்லுாரி முதல்வரே, இருவர் வீதம் தேர்வு செய்து அனுப்ப வேண்டும். அதேபோல், பள்ளி மாணவர்களை, தலைமை ஆசிரியர் தேர்வு செய்ய வேண்டும். வெற்றி பெறும் மாணவர்களுக்கு, முதல் பரிசாக, 5,000 ரூபாய்; இரண்டாம் பரிசாக, 3,000; மூன்றாம் பரிசாக 2,000 ரூபாய் வழங்கப்படும்.

பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, அக்., 2 காலை 10:00 மணிக்கும், கல்லுாரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, பகல் 2:00 மணிக்கும் நடக்கும். பங்கேற்கும் மாணவர்களில், அரசு பள்ளி மாணவர்களில் இருவரை தேர்வு செய்து, அவர்களுக்கு சிறப்பு பரிசுத் தொகை, 2,000 ரூபாய் வீதம் வழங்கப்படும். போட்டி நடக்கும் இடம், அந்தந்த மாவட்ட தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர் அல்லது உதவி இயக்குனரால் அறிவிக்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X