பொது செய்தி

தமிழ்நாடு

நகரமைப்பு பணி தேர்வு அறிவிப்பு

Added : செப் 25, 2021
Share
Advertisement
சென்னை:கட்டட வடிவமைப்பியல் உதவியாளர் மற்றும் திட்ட உதவியாளர் பதவிகளுக்கு, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் போட்டித் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக நகர் மற்றும் ஊரமைப்புத் துறையில், கட்டட வடிவமைப்பியல் உதவியாளர் மற்றும் திட்ட உதவியாளர் பதவிகளில் நான்கு காலியிடங்களை நிரப்ப, ஜன., 8ல் போட்டித் தேர்வு நடத்தப்படும் என, அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி.,

சென்னை:கட்டட வடிவமைப்பியல் உதவியாளர் மற்றும் திட்ட உதவியாளர் பதவிகளுக்கு, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் போட்டித் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக நகர் மற்றும் ஊரமைப்புத் துறையில், கட்டட வடிவமைப்பியல் உதவியாளர் மற்றும் திட்ட உதவியாளர் பதவிகளில் நான்கு காலியிடங்களை நிரப்ப, ஜன., 8ல் போட்டித் தேர்வு நடத்தப்படும் என, அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு நேற்று துவங்கியது; அக்., 23 வரை விண்ணப்பிக்கலாம்.

நகர அமைப்பில் முதுநிலை, சிவில் இன்ஜினியரிங், ஆர்கிடெக்ட் பட்டப்படிப்பு அல்லது இந்திய நகர அமைப்பியல் நிறுவனம், இந்திய ஆர்கிடெக்ட் நிறுவனத்தில் உறுப்பினர் அல்லது இந்திய இன்ஜினியர்ஸ் அமைப்பில் இணை உறுப்பினர், இவற்றில் ஏதாவது ஒரு தகுதி பெற்றிருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த பதவிக்கு குறைந்தபட்ச சம்பளமாக மாதம் 38 ஆயிரம் ரூபாய் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதவியில் பொது பிரிவினருக்கு வயது வரம்பு எதுவும் கிடையாது. விரிவான தகவல்களை, www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X