10 சதவீத ஒதுக்கீடு: சென்னை ஐகோர்ட் உத்தரவு ரத்து

Added : செப் 25, 2021
Share
Advertisement
புதுடில்லி:'பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்வகுப்பினருக்கு, மருத்துவ படிப்பில் 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கு முன், உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் அனுமதியை பெற வேண்டும்' என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களில் இதர பிற்படுத்தப்ட்ட

புதுடில்லி:'பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்வகுப்பினருக்கு, மருத்துவ படிப்பில் 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கு முன், உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் அனுமதியை பெற வேண்டும்' என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களில் இதர பிற்படுத்தப்ட்ட சமூகத்தினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடும், பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடும் வழங்கி, மத்திய அரசு ஜூலையில் உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்து, அதன் பின், 2021- - 22ம் ஆண்டு முதல் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும்படி சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது.


அவமதிப்பு வழக்கு

உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கை காரணம் காட்டி, உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த மறுப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., தரப்பில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டு அறிவிப்புக்கு அனுமதி அளித்தது.

அதே நேரத்தில், 'பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்ற அனுமதியின்றி அமல்படுத்த கூடாது' என, உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. பதில் மனு தாக்கல்அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:தி.மு.க., தாக்கல் செய்த அவமதிப்பு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தங்கள் அதிகார வரம்பை மீறி இப்படியொரு உத்தரவை பிறப்பித்து இருக்க கூடாது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் அனுமதி தேவையில்லை. எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.மருத்துவ படிப்புக்கான இட ஒதுக்கீடு தொடர்பான மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள பல்வேறு மனுக்கள், அடுத்த மாதம் 7ல், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். அதற்கு முன்னதாக அடுத்த மாதம் 6ம் தேதி, மத்திய அரசு தங்கள் தரப்பு பதில் மனுவை தாக்கல் செய்யலாம். இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X