அரசியல் செய்தி

தமிழ்நாடு

நதி நீர் பிரச்னைகளில் ஆஜராக வழக்கறிஞர் குழு

Added : செப் 25, 2021
Share
Advertisement
சென்னை:நதி நீர் பிரச்னைகள் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக, ஆறு வழக்கறிஞர்கள் அடங்கிய குழுவை அரசு நியமித்துள்ளது.கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள், தமிழகம் இடையே, காவிரி, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட பல்வேறு நதி நீர் பிரச்னைகள் உள்ளன. இது தொடர்பான வழக்குகள், உச்ச நீதிமன்றம், பசுமை தீர்ப்பாயம் உள்ளிட்டவற்றில் நடந்து வருகின்றன. இவ்வழக்குகளில் தமிழகத்தின்

சென்னை:நதி நீர் பிரச்னைகள் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக, ஆறு வழக்கறிஞர்கள் அடங்கிய குழுவை அரசு நியமித்துள்ளது.

கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள், தமிழகம் இடையே, காவிரி, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட பல்வேறு நதி நீர் பிரச்னைகள் உள்ளன. இது தொடர்பான வழக்குகள், உச்ச நீதிமன்றம், பசுமை தீர்ப்பாயம் உள்ளிட்டவற்றில் நடந்து வருகின்றன.

இவ்வழக்குகளில் தமிழகத்தின் சார்பில் ஆஜராக, ஆறு வழக்கறிஞர்கள் அடங்கிய குழுவை அரசு நியமித்துள்ளது. மூத்த வழக்கறிஞர்கள்முகில் ரோத்தகி, சேகர் நாப்டே, வி.கிருஷ்ணமூர்த்தி, என்.ஆர்.இளங்கோ, உமாபதி, குமணன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் பரிந்துரையை ஏற்று, இந்த உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X