உலகில் அமைதி, நிலைத்தன்மையை 'குவாட்' ஏற்படுத்தும்: பிரதமர் மோடி பேச்சு

Updated : செப் 25, 2021 | Added : செப் 25, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
வாஷிங்டன்: ''உலகில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை ஏற்படுத்தும் சக்தியாக 'குவாட்' அமைப்பு உள்ளது'' என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.இந்தோ -- பசிபிக் கடல் பிராந்தியத்தில் சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சியை முறியடிக்க 2017ல் அமெரிக்கா இந்தியா ஜப்பான் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து குவாட் அமைப்பை உருவாக்கின.குவாட் தலைவர்கள் நேரடியாக பங்கேற்கும் முதல் உச்சி
quad conference, four countries, pm, குவாட் மாநாடு, நான்கு நாடுகள், அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், கோவிட்,

வாஷிங்டன்: ''உலகில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை ஏற்படுத்தும் சக்தியாக 'குவாட்' அமைப்பு உள்ளது'' என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

இந்தோ -- பசிபிக் கடல் பிராந்தியத்தில் சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சியை முறியடிக்க 2017ல் அமெரிக்கா இந்தியா ஜப்பான் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து குவாட் அமைப்பை உருவாக்கின.குவாட் தலைவர்கள் நேரடியாக பங்கேற்கும் முதல் உச்சி மாநாடு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் நடந்தது. வாஷிங்டன்னில் உள்ள வெள்ளை மாளிகையில் இந்திய நேரப்படி இரவு 11 30 மணியளவில் குவாட் மாநாடு நடந்தது.

முதன்முறையாக நேரிடையாக நடந்த இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஆஸி., பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜப்பான் பிரதமர் யோஷிடே சுகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தியா சார்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், என்.எஸ்.ஏ.தோவல், வெளியுறவு செயலாளர் எச்.வி,ஸ்ரிங்லா மற்றும் அமெரிக்காவுக்கான இந்திய தூதுவர் டி.எஸ்.சாந்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கொரோனா தடுப்பூசி தயாரிப்பு வினியோகம் பருவநிலை மாற்றம் தொழில்நுட்ப ஒத்துழைப்பு கடல்சார் பாதுகாப்பு அடிப்படை கட்டமைப்பு நிதியுதவி உள்ளிட்ட சவால்களை சமாளிப்பது பற்றி மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டது.உலக நாடுகளை அச்சுறுத்தும் கோவிட்டுககு எதிராக போாராட நான்கு நாட்டின் தலைவர்களும் உறுதியாக முடிவெடுத்தனர்.இந்தோ- - பசிபிக் கடல் பிராந்தியத்தில் சரக்கு போக்குவரத்தை வலுப்படுத்தி வர்த்தகப் பொருளாதாரம் மேம்பாடு காண தேவையான நடவடிக்கைகள் எடுக்க மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.


மாநாட்டின் துவக்கத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குவாட் மூன்று நாட்டு பிரதமர்கள் மற்றும் அனைவரையும் வரவேற்று பேசினார். மாநாட்டை துவக்கி வைத்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசுகையில் ''கொரோனா முதல் தட்பவெப்ப மாற்றம் வரையிலான பொது பிரச்னைகளுக்கு தீர்வு காண நாம் கூடியுள்ளோம்'' என்றார்.
latest tamil newsமாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:உலகமே கொரோனா தொற்றுக்கு எதிராக கடும் போராட்டம் நடத்தி வருகிறது. நோய் தொற்றிலிருந்து மக்கள் விடுபட வேண்டும் என்ற மனிதநேய அடிப்படையில் நாம் ஒன்று கூடியுள்ளோம்.குவாட் அமைப்பு உலகில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது.குறிப்பாக இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் நிலைத்தன்மையை குவாட் ஏற்படுத்தும் என்பது உறுதி.கொரோனா தடுப்பூசி வினியோகத்தில் குவாட் முக்கிய பங்கு வகிக்கிறது.

கொரோனா தடுப்பூசிகளை மீண்டும் ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது. ஏழை நாடுகளின் மக்களின் நலன் கருதியே இந்த முடிவை இந்தியா எடுத்துள்ளது.உலகின் அமைதிக்கே பெரும் சவாலாக பயங்கரவாதம் உள்ளது. இதை வேரோடு அழிக்க நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.அண்டை நாடு என்ற முறையில் ஆப்கானிஸ்தானில் அமைதியும் ஜனநாயகமும் ஏற்பட இந்தியா விரும்புகிறது. ஆப்கனின் வளர்ச்சிக்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும். இவ்வாறு மோடி பேசினார்.ஜப்பான் பிரதமர் யோஷிடே சுகா, ‛ நம்முடைய அற்புதமான விஷயங்களை பகிர்ந்து கொள்வோம். இந்தோ பசிபிக் பகுதியில் சுதந்திரமாக சென்று வரவும் பாதுகாப்பு ஏற்படுத்தவும் முயற்சி மேற்கொள்வோம். குவாட் மாநாடு நம் உறவுகள் எவ்வளவு ஆழமானது என்பதை உணர்த்துகிறது' இவ்வாறு அவர் பேசினார்.
குவாட்' அமைப்புமுக்கியத்துவம் இழக்கும்இந்தோ -- பசிபிக் கடலில் சீன ஆதிக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்கா பிரிட்டன் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் இணைந்து ஏ.யு.கே.யு.எஸ். என்ற 'ஆகுஸ்' பாதுகாப்பு அமைப்பை உருவாக்கி உள்ளன.

இந்த அமைப்பின் கீழ் அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து 12 அணு நீர்மூழ்கி கப்பல்களை ஆஸ்திரேலியாவுக்கு வழங்க உள்ளன. இக்கப்பல்கள் இந்தோ - பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு பயன்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இதே கடல் பிராந்தியத்தில் சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க 'குவாட்' என்ற அமைப்பின் கீழ் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகியவை ஒன்றிணைந்து உள்ளன.அப்படியிருக்கையில் இந்தியா, ஜப்பானை தவிர்த்து மேலும் ஒரு அமைப்பு எதற்கு என்ற கேள்வி பல்வேறு தரப்பிலும் எழுந்துள்ளது.

வெளியுறவு விவகாரத்துறை நிபுணரும், எழுத்தாளருமான பிரம்மா செல்லானே கூறியதாவது:'ஆகுஸ்' என்ற இந்த அமைப்பு உருவாகி இருப்பதால் 'குவாட்' அமைப்பின் முக்கியத்துவம் நாளடைவில் வலுவிழக்கும். அமெரிக்காவுடனான உறவில் ஆஸ்திரேலியா அனுபவிக்கும் பலன்கள் அனைத்தும் இந்தியா, ஜப்பானுக்கு கிடைக்காமல் போகும்.இந்த புதிய அமைப்பின் வாயிலாக ஆஸ்திரேலியாவில் இருந்து லாபகரமான ராணுவ ஒப்பந்தங்கள் அமெரிக்காவுக்கு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

குறிப்பாக இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் சீனாவைப் போல இந்தியாவும் மிகப் பெரிய சக்தியாக உருவாகிவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை உணர்வு அமெரிக்காவுக்கு இருப்பதாலேயே இது போன்ற தனியாக ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-செப்-202107:19:53 IST Report Abuse
அப்புசாமி சீனாவை ஓரம் கட்டுவோம்... சொல்ல மறந்துட்டாங்களா? இல்லை எல்லோருக்கும் சீனாவின் தயவு தேவைப் படுதா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X