பொது செய்தி

தமிழ்நாடு

2.4 லட்சம் மலர் செடிகள் ஊட்டி பூங்காவில் 'ரெடி'

Added : செப் 25, 2021
Share
Advertisement
ஊட்டி:ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாவது சீசனுக்கு, 2.4 லட்சம் மலர் செடிகள் தயார்படுத்தப்பட்டு உள்ளன. நீலகிரி மாவட்டம், ஊட்டியில் செப்., - அக்., மாதங்களில் இரண்டாவது சீசன் நடக்கிறது. இதையொட்டி, அரசு தாவரவியல் பூங்காவை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பூங்காவில் உள்ள மாடங்களில் மேரி கோல்டு, பேன்சி, லுாப்பின், பிகோனியா, டேலியா உட்பட 150 ரகங்களில் மலர் செடிகளை
2.4 லட்சம் மலர் செடிகள் ஊட்டி பூங்காவில் 'ரெடி'

ஊட்டி:ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாவது சீசனுக்கு, 2.4 லட்சம் மலர் செடிகள் தயார்படுத்தப்பட்டு உள்ளன.

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் செப்., - அக்., மாதங்களில் இரண்டாவது சீசன் நடக்கிறது. இதையொட்டி, அரசு தாவரவியல் பூங்காவை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பூங்காவில் உள்ள மாடங்களில் மேரி கோல்டு, பேன்சி, லுாப்பின், பிகோனியா, டேலியா உட்பட 150 ரகங்களில் மலர் செடிகளை மாடங்களில் அடுக்கி வைக்கும் பணியை, கலெக்டர் துவக்கி வைத்தார்.

கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், ''பூங்காவில் 2.4 லட்சம் மலர் செடிகள் தயார்படுத்தப்பட்டுள்ளன. கணிசமான சுற்றுலா பயணியர் நீலகிரி வருவதால், கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில், நாளை மறுதினம் முதல் சிறப்பு வசதி ஏற்படுத்தப்படுகிறது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X