பொது செய்தி

தமிழ்நாடு

பாம்பன் புதிய பாலம் 2022 மார்ச்சில் தயார்?

Added : செப் 25, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம்:''பாம்பனில் 2022 மார்ச்சில் புதிய ரயில் பாலம் பணி முடிந்து ரயில் இயக்க வாய்ப்பு உள்ளது,'' என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான்தாமஸ் தெரிவித்தார்.ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் கடலில் புதிய ரயில் பால கட்டு மானத்தை நேற்று ஆய்வு செய்த அவர் கூறிய தாவது:புதிய ரயில் பால கட்டுமானம் 50 சதவீதம் முடிந்த நிலையில், 'கர்டர்' பொருத்தும் பணி நடக்க உள்ளது. இருப்பினும்,
 பாம்பன் புதிய பாலம் 2022 மார்ச்சில் தயார்?

ராமேஸ்வரம்:''பாம்பனில் 2022 மார்ச்சில் புதிய ரயில் பாலம் பணி முடிந்து ரயில் இயக்க வாய்ப்பு உள்ளது,'' என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான்தாமஸ் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் கடலில் புதிய ரயில் பால கட்டு மானத்தை நேற்று ஆய்வு செய்த அவர் கூறிய தாவது:புதிய ரயில் பால கட்டுமானம் 50 சதவீதம் முடிந்த நிலையில், 'கர்டர்' பொருத்தும் பணி நடக்க உள்ளது. இருப்பினும், அடுத்த மாதம் துவங்கும் பருவ மழை சீசனால் பணியில் சற்று தாமதம் ஏற்படும்.

ஆனாலும், 2022 மார்ச்சில் பணி முடிந்து, ரயில் போக்குவரத்து துவங்க வாய்ப்பு உள்ளது.புதிய பாலத்திற்கு, முந்தைய நிதி 250 கோடி ரூபாயை விட கூடுதலாக 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. புதிய பாலம், தற்போதைய பாலம் போல் 100 ஆண்டுகள் வலுவாக இருக்கும். தற்போதைய பாலத்தில் மராமத்து முடிந்து, 100 சதவீதம் உறுதித் தன்மையுடன் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X