சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பழநி அருகே பஸ் - லாரி மோதலில் மூவர் பலி

Added : செப் 25, 2021
Share
Advertisement
சாமிநாதபுரம்:பழநி அருகே தாளையூத்தில் அரசு பஸ் - லாரி மோதியதில் பயணிகள் மூவர் பலியாயினர்.திண்டுக்கல் மாவட்டம் பழநியில் இருந்து நேற்று முன்தினம் இரவு 2:45 மணிக்கு கோவைக்கு அரசு பஸ் சென்றது. கோவை ரோட்டில் தாளையூத்து அருகே சென்ற போது எதிரே பழநி நோக்கி வந்த லாரி, பஸ்சின் மீது மோதி உரசியபடி சென்றது. இதில் பஸ்சின் பக்கவாட்டு பகுதியில் சேதம் ஏற்பட்டது.அதன் தொடர்ச்சியாக மோதிய
 பழநி அருகே பஸ் - லாரி மோதலில் மூவர் பலி

சாமிநாதபுரம்:பழநி அருகே தாளையூத்தில் அரசு பஸ் - லாரி மோதியதில் பயணிகள் மூவர் பலியாயினர்.

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் இருந்து நேற்று முன்தினம் இரவு 2:45 மணிக்கு கோவைக்கு அரசு பஸ் சென்றது. கோவை ரோட்டில் தாளையூத்து அருகே சென்ற போது எதிரே பழநி நோக்கி வந்த லாரி, பஸ்சின் மீது மோதி உரசியபடி சென்றது. இதில் பஸ்சின் பக்கவாட்டு பகுதியில் சேதம் ஏற்பட்டது.அதன் தொடர்ச்சியாக மோதிய வேகத்தில் லாரியும் நிலைதடுமாறி கவிழ்ந்தது.

இந்த சம்பவத்தில் பஸ்சில் பயணித்த பொள்ளாச்சியை சேர்ந்த மணிகண்டபிரபு 30, விருதுநகர் மாவட்டம் புளியங்குளத்தைச் சேர்ந்த உக்கிரபாண்டியன் 23, தேனி மாவட்டம் ஆண்டிபட்டி முருகன் 38, ஆகிய மூவர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

லாரியை ஓட்டி வந்த பாலசமுத்திரம் பொருந்தல் பகுதியை சேர்ந்த ராஜேஷ் 32, அவருடன் வந்த ராஜசேகர் 19, மணிவேல் 21, சரவணகுமார் 22, மற்றும் பயணிகள் உட்பட 14 பேர் காயமடைந்தனர். அவர்கள் பழநி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திண்டுக்கல் எஸ்.பி., ஸ்ரீனிவாசன், டி.எஸ்.பி., சத்யராஜ் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். சாமிநாதபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X