பொது செய்தி

தமிழ்நாடு

2022 மார்ச்சில் பாம்பன் புதிய பாலத்தில் ரயில் இயக்கம்: தென்னக ரயில்வே பொது மேலாளர் பேட்டி

Added : செப் 25, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம்:பாம்பனில் 2022 மார்ச்சில் புதிய ரயில் பாலம் பணி முடிந்து ரயில் இயக்க வாய்ப்பு உள்ளது, என தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான்தாமஸ் தெரிவித்தார்.பாம்பன் கடலில் புதிய ரயில் பால கட்டுமானத்தை ஆய்வு செய்த அவர்கூறியதாவது :புதிய ரயில் பாலம் கட்டுமானம் 50 சதவீதம் முடிந்த நிலையில், கர்டர் பொருத்தும் பணி நடக்க உள்ளது. இருப்பினும் அடுத்த மாதம் துவங்கும் பருவ மழை சீசனால்
 2022 மார்ச்சில் பாம்பன் புதிய பாலத்தில் ரயில் இயக்கம்: தென்னக ரயில்வே பொது மேலாளர் பேட்டி

ராமேஸ்வரம்:பாம்பனில் 2022 மார்ச்சில் புதிய ரயில் பாலம் பணி முடிந்து ரயில் இயக்க வாய்ப்பு உள்ளது, என தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான்தாமஸ் தெரிவித்தார்.

பாம்பன் கடலில் புதிய ரயில் பால கட்டுமானத்தை ஆய்வு செய்த அவர்கூறியதாவது :புதிய ரயில் பாலம் கட்டுமானம் 50 சதவீதம் முடிந்த நிலையில், கர்டர் பொருத்தும் பணி நடக்க உள்ளது. இருப்பினும் அடுத்த மாதம் துவங்கும் பருவ மழை சீசனால் பணியில் சற்று தாமதம் ஏற்படும். ஆனாலும் 2022 மார்ச்சில் பணி முடிந்து ரயில் போக்குவரத்து துவங்க வாய்ப்பு உள்ளது.

புதிய பாலத்திற்கு முந்தைய நிதியை (ரூ. 250 கோடி) விட கூடுதலாக ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. புதிய பாலம், தற்போதைய பாலம் போல் 100 ஆண்டு வலுவாக இருக்கும்.தற்போதைய பாலத்தில் மராமத்து முடிந்து 100 சதவீதம் உறுதி தன்மையுடன் உள்ளது. கொரோனா தளர்வு நீங்கியதும் ராமேஸ்வரம், மதுரைக்கு பயணிகள் ரயில் போக்குவரத்து துவக்கப்படும்.

மின் தடம் : ராமநாதபுரம், ராமேஸ்வரம் இடையே அமையும் மின் வழித்தடத்தில் உச்சிப்புளி- வாலாந்தரவை இடையில் விமானப்படை தளம் உள்ளதால், மாற்று பாதையில் மின் வழித்தடம் அமைக்க விமானப்படையினர் வலியுறுத்தினர். தமிழக அரசிடம் ஆலோசித்து மாற்று பாதையில் மின் வழித்தடம் அமைக்கப்படும்.ராமேஸ்வரம், தனுஷ்கோடிக்கு ரயில் பாதை அமைக்க விரைவில் ஆய்வு நடக்கும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X