பொது செய்தி

தமிழ்நாடு

யு.பி.எஸ்.சி., தேர்வில் மதுரை டாக்டர் தேர்ச்சி: தரவரிசையில் 589 வது இடம்

Added : செப் 25, 2021
Share
Advertisement
சிவகங்கை:யு.பி.எஸ்.சி., தேர்வில் தேசிய அளவில் தரவரிசை பட்டியலில் மதுரை டாக்டர் முகமது ரிஸ்வின் 589 வது இடம் பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளார்.மத்திய அரசில் பல்வேறு பணிகளுக்கான யு.பி.எஸ்.சி., முதல் நிலை தேர்வு 2020 ல் நடந்தது. இத்தேர்வில் இந்திய அளவில் 10 லட்சம் பேர் பங்கேற்றனர். மதுரை அரசு மருத்துவ கல்லுாரியில் 2013 முதல் 2019 வரை எம்.பி.பி.எஸ்., படித்த அண்ணாநகரை சேர்ந்த டாக்டர் முகமது

சிவகங்கை:யு.பி.எஸ்.சி., தேர்வில் தேசிய அளவில் தரவரிசை பட்டியலில் மதுரை டாக்டர் முகமது ரிஸ்வின் 589 வது இடம் பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளார்.

மத்திய அரசில் பல்வேறு பணிகளுக்கான யு.பி.எஸ்.சி., முதல் நிலை தேர்வு 2020 ல் நடந்தது. இத்தேர்வில் இந்திய அளவில் 10 லட்சம் பேர் பங்கேற்றனர். மதுரை அரசு மருத்துவ கல்லுாரியில் 2013 முதல் 2019 வரை எம்.பி.பி.எஸ்., படித்த அண்ணாநகரை சேர்ந்த டாக்டர் முகமது ரிஸ்வின் தேர்வினை எழுதினார். முதல் நிலை தேர்வு 2021 ஜூனில் நடந்த மெயின் தேர்வில்' தேர்ச்சி பெற்றார்.

தொடர்ந்து செப்டம்பரில் நடந்த நேர்முக தேர்விலும் தேர்ச்சி பெற்று தேசிய அளவில் தரவரிசை பட்டியலில் 589 வது இடத்தில் வெற்றி பெற்றார்.டாக்டர் முகமது ரிஸ்வின் கூறியதாவது: மருத்துவ படிப்பிற்கிடையே யு.பி.எஸ்.சி., தேர்விற்கும் தயார்படுத்தினேன். முதல் முயற்சியிலேயே தரவரிசையில் 589வது இடத்தை பிடித்து தேர்ச்சி பெற்றேன். ஐ.பி.எஸ்., அல்லது ஐ.ஆர்.எஸ்., (இந்தியன் ரெவின்யூ சர்வீஸ்) பதவி கிடைக்கும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X