'டுவிட்டர்' அதிகாரிகள் நியமனம்; கோர்ட்டுக்கு மத்திய அரசு பதில்

Updated : செப் 25, 2021 | Added : செப் 25, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி-சமூக வலைதளமான 'டுவிட்டர்' நிறுவனம், புதிய தகவல் தொழில்நுட்ப சட்டப்படி, முக்கிய பொறுப்புகளில் அதிகாரிகளை நியமித்துள்ளதாக, டில்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.விசாரணைபுதிய தகவல் தொழில்நுட்ப சட்டப்படி டுவிட்டர் நிறுவனம் குறை தீர்ப்பு அதிகாரியை நியமிக்க உத்தரவிடக் கோரி, அமித் ஆச்சார்யா என்ற வழக்கறிஞர் டில்லி உயர்

புதுடில்லி-சமூக வலைதளமான 'டுவிட்டர்' நிறுவனம், புதிய தகவல் தொழில்நுட்ப சட்டப்படி, முக்கிய பொறுப்புகளில் அதிகாரிகளை நியமித்துள்ளதாக, டில்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.



latest tamil news



விசாரணைபுதிய தகவல் தொழில்நுட்ப சட்டப்படி டுவிட்டர் நிறுவனம் குறை தீர்ப்பு அதிகாரியை நியமிக்க உத்தரவிடக் கோரி, அமித் ஆச்சார்யா என்ற வழக்கறிஞர் டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடதார். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி டுவிட்டர் நிறுவனம், தலைமை பொறுப்பு அதிகாரி உள்ளிட்ட பதவிகளுக்கு தற்காலிக ஆட்களை நியமித்தது. இதை கண்டித்த நீதிமன்றம், சட்டப்படி முக்கிய பொறுப்புகளில் நிரந்தர அதிகாரிகளை நியமிக்கும்படி டுவிட்டர் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.

இதன்படி தலைமை பொறுப்பு அதிகாரி, குறை தீர்ப்பு அதிகாரி, மண்டல தொடர்பு அதிகாரி ஆகிய பதவிகளுக்கு நிரந்தர பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசுக்கு டுவிட்டர் நிறுவனம் தெரிவித்தது.இந்த வழக்கு நேற்று டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி ரேகா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.


latest tamil news


அதில் கூறப்பட்டுள்ளதாவது:புதிய தகவல் தொழில்நுட்ப சட்டப்படி தலைமை பொறுப்பு அதிகாரி, குறை தீர்ப்பு அதிகாரி, மண்டல தொடர்பு அதிகாரி ஆகியோரை நிரந்தரமாக பணியமர்த்தியுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.ஒப்பந்தம்அவர்கள் ஆக., 4 முதல் அப்பொறுப்பில் உள்ளனர். அவர்களின் ஊதியம், ஒப்பந்தம் உள்ளிட்டவை தொடர்பான விபரங்களை டுவிட்டர் வழங்கியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை அக்., 5க்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkat - Chennai,இந்தியா
25-செப்-202109:58:58 IST Report Abuse
Venkat ஏண்டா இதை முதலிலேயே மத்திய அரசு சொன்னதும் செய்து இருக்கலாமே. மோடி என்ன கொக்கா. அவர் ஒரு தேச பக்தர். இந்தியாவை ஒரு போதும் விட்டு கொடுக்க மாட்டார். வெளிநாட்டவருக்கு அடிபணிய மாட்டார்
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
25-செப்-202106:56:34 IST Report Abuse
NicoleThomson மோதல் போக்கில் மாத்திரம் ஈடுபடுவது எந்த நிறுவனத்துக்கும் அழகல்ல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X