பொது செய்தி

தமிழ்நாடு

நெற்பயிருக்கான பயிர் காப்பீடு : விவசாயிகள் அதிர்ச்சி

Added : செப் 25, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்:தமிழகத்தில் நெற்பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நடப்பு ஆண்டில் 15 நாட்கள் குறைத்துள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.தமிழகத்தில் இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்துகிறது. பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் 2021 - -22க்கான காப்பீடு கால அவகாசம் கடந்த ஆண்டுகளில் நவ.30 கடைசி நாளாக இருந்து வந்தது. இந்த ஆண்டு

ராமநாதபுரம்:தமிழகத்தில் நெற்பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நடப்பு ஆண்டில் 15 நாட்கள் குறைத்துள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்துகிறது. பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் 2021 - -22க்கான காப்பீடு கால அவகாசம் கடந்த ஆண்டுகளில் நவ.30 கடைசி நாளாக இருந்து வந்தது.

இந்த ஆண்டு நவ.15 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 15 நாட்கள் காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.வடகிழக்கு பருவ மழை இன்னும் துவங்காத நிலையில், ராமநாதபுரம் போன்ற வானம் பார்த்த வறண்ட மாவட்டங்களில் விவசாயிகள் அக்., கடைசியில் தான் நெல் சாகுபடிக்கே தயாராவார்கள்.

இதனால் நெல் சாகுபடியே துவக்கப்படாத நிலையில், காப்பீடு செய்வதில் பல நடைமுறை சிக்கல் ஏற்படும். இதனால் பயிர் காப்பீடு காலத்தை வழக்கம் போல் நவ.30 வரை நீட்டிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X