பொது செய்தி

தமிழ்நாடு

களக்காடு முதல் தேக்கடி வரை புலிகள் விழிப்புணர்வு ஊர்வலம்

Added : செப் 25, 2021
Share
Advertisement
கம்பம்:வனத்துறை சார்பில் களக்காடு முண்டந்துறையிலிருந்து தேக்கடி வரை புலிகள் பற்றிய விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்படுகிறது. செப். 26ல் தேனிக்கு வந்து மேகமலை வழியாக தேக்கடி செல்கிறது.புலிகள் எண்ணிக்கை குறைவதை தடுக்க புலிகள் காப்பகங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை 51 வது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புலிகள் பற்றிய

கம்பம்:வனத்துறை சார்பில் களக்காடு முண்டந்துறையிலிருந்து தேக்கடி வரை புலிகள் பற்றிய விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்படுகிறது.

செப். 26ல் தேனிக்கு வந்து மேகமலை வழியாக தேக்கடி செல்கிறது.புலிகள் எண்ணிக்கை குறைவதை தடுக்க புலிகள் காப்பகங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை 51 வது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புலிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த டில்லியில் உள்ள தேசிய புலிகள் பாதுகாப்பு முகமை விழிப்புணர்வு ஊர்வலம் நடத்த உத்தரவிட்டுள்ளது.அதன்படி திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திலிருந்து கொடியுடன் வனத்துறையினர் வாகன ஊர்வலம் துவங்கி ஸ்ரீவில்லி புத்துார், செப். 26ல் தேனி, சின்னமனுார், மேகமலை, கம்பம் வழியாக தேக்கடி பெரியாறு புலிகள் காப்பகத்திற்கு செல்கிறது.

ஊர்வலத்தில் எடுத்து வரும் கொடி, மேகமலை புலிகள் காப்பகம், பெரியாறு புலிகள் காப்பகத்தில் வைக்கப்பட்டு பின் பரம்பிக்குளம் வழியாக பந்திப்பூர் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று இந்தியாவில் உள்ள அனைத்து புலிகள் காப்பகங்களிலும் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X