சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பழனிசாமி வரவேற்பில் அ.தி.மு.க., வினர் மோதல்

Added : செப் 25, 2021
Share
Advertisement
சாத்துார்:திருநெல்வேலி சென்ற அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமிக்கு, விருதுநகர்மாவட்டம் சாத்துாரில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அ.தி.மு.க.,வினர் கோஷ்டியாக பிரிந்து மோதிக்கொண்டனர்.உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க., செயல்வீரர் கூட்டம் திருநெல்வேலி, தென்காசியில் நடந்தது. இதில் பங்கேற்க பழனிசாமி காரில் சென்றார்.சாத்துார் வெங்கடாஜலபுரம் விலக்கில் போலீஸ்
 பழனிசாமி வரவேற்பில் அ.தி.மு.க., வினர் மோதல்

சாத்துார்:திருநெல்வேலி சென்ற அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமிக்கு, விருதுநகர்மாவட்டம் சாத்துாரில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அ.தி.மு.க.,வினர் கோஷ்டியாக பிரிந்து மோதிக்கொண்டனர்.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க., செயல்வீரர் கூட்டம் திருநெல்வேலி, தென்காசியில் நடந்தது. இதில் பங்கேற்க பழனிசாமி காரில் சென்றார்.சாத்துார் வெங்கடாஜலபுரம் விலக்கில் போலீஸ் செக்போஸ்ட் அருகே, விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.கே. ரவிச்சந்திரன், சாத்துார் கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முககனி தலைமையில் கட்சியினர் வரவேற்றனர்.

காரில் இருந்தப்படி சால்வை, பூங்கொத்துக்களை பெற்ற பழனிசாமியிடம், ராமலிங்காபுரம் கிளை செயலாளர் வீரேவுரெட்டி, ''விருதுநகர் மாவட்டத்தில் அ.தி.மு.க., தோல்விக்கு காரணமான முன்னாள் அமைச்சர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை ஏன் காரில் அழைத்து வருகிறீர்கள்,'' என கேள்வி எழுப்பினார்.

இதில் கோபமடைந்த ராஜேந்திர பாலாஜி காரில் இருந்து இறங்கி, பின்னால் வந்த காரில் இருந்தவர்களிடம், ''இவனை துாக்கி காரில் போடு'' என கூறி உள்ளார். அதன்படி வீரேவுரெட்டியை தாக்கி காரில் ஏற்ற முயன்றனர். இதை பார்த்த சண்முககனி போலீசார் உதவியுடன் வீரேவு ரெட்டியை மீட்டார். ராஜேந்திர பாலாஜி ஆதரவாளரான முன்னாள் எம்.எல்.ஏ., ராஜவர்மன் ஆதரவாளர்களும், சண்முககனி ஆதரவாளர்களும் தாக்கிக் கொண்டனர்.

போலீசார் கூட்டத்தினரை கலைத்தனர்.இதை தொடர்ந்து சாத்துார் நகர செயலாளர் இளங்கோவன், ராஜவர்மனிடம் பேசியதை பார்த்த சண்முககனி, தம்பி ரமேஷ், ராதா கிருஷ்ணன், ராஜா ஆகியோர் ''ராஜவர்மனிடம் ஏன் போகிறாய்'' எனக் கூறி இளங்கோவனை தாக்கினர். இதனிடையே வீரேவுரெட்டி, தன்னை தாக்கி காரில் ஏற்ற முயன்ற ராஜேந்திர பாலாஜி, ராசு, ஹரிஹரன், மணி, பாண்டியராஜ், பார்த்தால் அடையாளம் காட்டக்கூடிய சிலர் மீது சாத்துார் டவுன் போலீசில் புகார் செய்தார்.

ராஜேந்திர பாலாஜி உட்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அ.தி.மு.க.,வினரின் அடிதடி, வரவேற்பில் ரோட்டில் குவிந்த கட்சியினரால் நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X