பொது செய்தி

இந்தியா

'ஏர் பஸ்' நிறுவனத்திடம் இருந்து 56 விமானங்கள் வாங்க மத்திய அரசு ஒப்பந்தம்

Updated : செப் 25, 2021 | Added : செப் 25, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி,-'ஏர் பஸ்' நிறுவனத்திடம் இருந்து 56 ராணுவ போக்குவரத்து விமானங்களை வாங்க, மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.முப்படைகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. இதன்படி விமானங்கள், ஹெலிகாப்டர் மற்றும் ராணுவ தளவாடங்கள் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன.'ஆவ்ரோ - 748'இந்நிலையில்,இந்திய விமானப்படையில் ராணுவ உபகரணங்கள் மற்றும்
ஏர் பஸ், நிறுவனம், புதிய விமானங்கள், மத்திய அரசு, ஒப்பந்தம்

புதுடில்லி,-'ஏர் பஸ்' நிறுவனத்திடம் இருந்து 56 ராணுவ போக்குவரத்து விமானங்களை வாங்க, மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

முப்படைகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. இதன்படி விமானங்கள், ஹெலிகாப்டர் மற்றும் ராணுவ தளவாடங்கள் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன.'ஆவ்ரோ - 748'இந்நிலையில்,இந்திய விமானப்படையில் ராணுவ உபகரணங்கள் மற்றும் வீரர்களின் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்பட்டுவரும் 'ஆவ்ரோ - 748' ரக விமானங்களை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக விமான தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ் நிறுவனத்துடன், மத்திய அரசு ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது. 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் செய்யப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின்படி, 56, சி - 295 ரக போக்குவரத்து விமானங்களை வாங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக, ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் செவில்லே பகுதியில் இயங்கும் ஏர் பஸ் தயாரிப்பு தொழிற்சாலையிலிருந்து 16 விமானங்கள் வினியோகிக்கப்பட உள்ளன. வினியோகம்இந்த ஒப்பந்தத்தின்படி, மீதமுள்ள 40 விமானங்கள் இந்தியாவில் உள்ள, 'டாடா அட்வான்ஸ்ட் சிஸ்டம்ஸ்' நிறுவனத்தால் தயாரித்து வினியோகிக்கப்பட உள்ளன.


latest tamil news



ரத்தன் டாடா பாராட்டு

'ஏர் பஸ்' நிறுவனத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தம் தொடர்பான அறிக்கையை, தன், 'டுவிட்டர்' பக்கத்தில் பகிர்ந்த தொழிலதிபர் ரத்தன் டாடா, ஏர் பஸ், டாடா அட்வான்ஸ்ட் சிஸ்டம்ஸ் மற்றும் ராணுவ அமைச்சகத்தை பாராட்டி, பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:ஏர் பஸ் - டாடா திட்டத்தின்கீழ், 56, சி - 295 ரக ராணுவ போக்குவரத்து விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது, மிகப்பெரிய நடவடிக்கை. இந்த முயற்சியின் வாயிலாக இந்திய விமானத் துறை நல்ல வளர்ச்சி அடையும் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்தியாவில் ஒரு தனியார் நிறுவனத்தால் ராணுவ விமானங்கள் தயாரிக்கப்பட உள்ளது இதுவே முதன் முறை.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
elakkumanan - Naifaru,மாலத்தீவு
25-செப்-202110:57:59 IST Report Abuse
elakkumanan டாடா என்ற கார்பொரேட் கம்பெனிக்கு கொடுக்காம, எங்க ஊரில் குடிசைத்தொழில் செய்யும் டிவி நிறுவனம், சாராயம் காய்ச்சும் சின்ன குறு குடிசை நிறுவனம் ஏரோபிளான் போக்குவரத்து நடத்தும் ஸ்டார்ட்அப் கம்பெனி ....இதுக்கெல்லாம் மேற்படி கான்ட்ராக்ட்டை கொடுக்க கூடாதா? மேக் இந்த டுமீல் பட்டி லிஸ்ட் கீழே இணைக்கப்பட்டுள்ளது.. பிரதமர் பார்வைக்கு.. ரெண்டு ஜி , கூவம் முதலை, வீராணம், பாக்கெட் சாராயம், போட்டி தேர்வு எழுத முடியாத ஆனால், முன்னேறிய கல்வி திட்டம், இலவசமா நாமம் போடும் திட்டம், கூடி திருடி கொடிகளை பிரித்து இன்புற்று வாழும் இன மானம், தொழிற்சாலைகளை மூடி சாராய கடையை திறந்து, சிலை வைத்து பொருளாதாரம் வளர்க்கும் நவீன முன்னேறிய பொருளாதார வழிமுறைகள், இருட்டில் வெளிச்சம் தேடும் அல்ட்ரா தொழில் நுணுக்கம், சினிமாவுக்கு பெயர் வைத்து மொழியை வளர்க்கும் நூதன மொழிவளர்ப்பு முறை, பள்ளியில் ஆங்கிலமும் கோயிலில் தமிழும் சொல்லித்தரும் உன்னத மொழி வளர்ப்பு திட்டம்... இப்படி பெரிய லிஸ்ட் இருக்கு..ஆனால், வடமாநிலத்தவர்களுக்கே சலுகைகளை வழங்கும் மோடி ஒழிக... வடக்கத்தியான் ஒழிக.. மோடி ஒழிக.. திருட்டு திராவிடம் வாழ்க... சொந்த பெயரைக்கூட சொல்ல துப்பில்லாத முட்டு கம்பெனி வாழ்க... ஈன மானம் வாழ்க...சமூகநீதி படி இட ஒதுக்கீடு எல்லாம் கிடையாதா? பெரியான் மண்ணுடா... இலவசம் கொடுங்கடா.. வேலையும் வளர்ச்சியும் வேண்டாம் டா... ஏலேய் ,கமிஷன் இல்லயாம் டா... அப்போ காண்ட்ராக்ட் வேண்டாம் டா...
Rate this:
Cancel
THANGARAJ - CHENNAI,இந்தியா
25-செப்-202110:20:39 IST Report Abuse
THANGARAJ ஏர் இந்திய நிறுவனத்தை விற்பதற்கு முயற்சிகள் எடுக்கும் போது 56 புது விமானங்கள் ஏர் பஸ் நிறுவனத்திடம் வாங்குவது எதற்கு? ஏர் பஸ் - டாடா திட்டத்தின்கீழ், 56, சி - 295 ரக ராணுவ போக்குவரத்து விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது, ஏர்பஸ் - டாடா கூட்டு தயாரிப்பில் புது விமானங்கள் வாங்கி, ஏர் இந்தியாவை விற்கும் பொது அதே டாட்டா & பிற நிறுவனத்துக்கு பாதி விலையில் விற்கவா?
Rate this:
R Ravikumar - chennai ,இந்தியா
25-செப்-202111:31:33 IST Report Abuse
R Ravikumar@ தங்கராஜ் சார், ஏர் இந்தியா விமானங்களும் , சி - தர ராணுவ விமானங்களும் ஒன்று அல்ல . கொஞ்சம் தெரிந்து கொண்டு பதிவு செய்யுங்கள் . குறுக்கு எண்ணத்தோடு பதிவு செய்யா வேண்டாம் ....
Rate this:
Rajeswaran - chennai,இந்தியா
25-செப்-202114:33:44 IST Report Abuse
Rajeswaranசெய்தியை முழுமையாக படித்து பின்பு பதிவு போடவும் வாங்கப்படும் விமானங்கள் அனைத்தும் ராணுவ பயன்பாட்டுக்கு ஏர் இந்தியா நிறுனவனத்திற்கு அல்ல...
Rate this:
Cancel
Arul Narayanan - Hyderabad,இந்தியா
25-செப்-202109:38:30 IST Report Abuse
Arul Narayanan இனி ராகுலின் வசவுப் பட்டியலில் டாட்டாவும் இடம் பெறுவார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X