கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஆணவ கொலையில் ஒருவருக்கு 'தூக்கு' : 'மாஜி' டி.எஸ்.பி., உட்பட 12 பேருக்கு ஆயுள்

Added : செப் 25, 2021
Share
Advertisement
கடலுார்:விருத்தாசலம் அருகே நடந்த ஆணவ கொலை வழக்கில், பெண்ணின் சகோதரருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பெண்ணின் தந்தை மற்றும் ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 12 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, கடலுார் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அருகே குப்பநத்தத்தைச் சேர்ந்த சாமிக்கண்ணு மகன் முருகேசன், 25; ஆதிதிராவிடர் சமுதாயத்தைச்
 ஆணவ கொலையில் ஒருவருக்கு 'தூக்கு' : 'மாஜி' டி.எஸ்.பி., உட்பட 12 பேருக்கு ஆயுள்

கடலுார்:விருத்தாசலம் அருகே நடந்த ஆணவ கொலை வழக்கில், பெண்ணின் சகோதரருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பெண்ணின் தந்தை மற்றும் ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 12 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, கடலுார் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அருகே குப்பநத்தத்தைச் சேர்ந்த சாமிக்கண்ணு மகன் முருகேசன், 25; ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் துரைசாமி மகள் கண்ணகி, 22; இருவரும் காதலித்தனர்.

2003 மே 5ல், கடலுாரில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். விழுப்புரம் மாவட்டம், மூங்கில்துறைப்பட்டில் உள்ள உறவினர் வீட்டில் கண்ணகியை தங்க வைத்தார். ஸ்ரீமுஷ்ணம் அடுத்த வண்ணாங்குடிகாட்டில் உள்ள உறவினர் வீட்டில் முருகேசன் தங்கினார்.


எரித்து கொலை

தகவலறிந்து, கண்ணகியின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதே ஆண்டு ஜூலை 7ல், முருகேசனின் சித்தப்பா அய்யாசாமி உதவியுடன் முருகேசன், கண்ணகியை அங்கிருந்து அழைத்து வந்தனர். மறுநாள் 8ம் தேதி இருவரின் காது, வாயில் விஷம் ஊற்றியும், எரித்தும் கொன்றனர். முருகேசனின் தந்தை சாமிக்கண்ணு, விருத்தாசலம் போலீசில் புகார் கொடுத்தார்.

முருகேசன் - கண்ணகி இருவரும் ஜாதி மாறி திருமணம் செய்ததால், அவரவர் உறவினர்கள் தங்கள் பிள்ளைகளை கொலை செய்ததாகக் கூறி, இரு தரப்பிலும் தலா நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.


சி.பி.ஐ.,க்கு மாற்றம்



இது ஆணவ கொலை எனவும், சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் எனவும் பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தின. 2004ல் வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது.விசாரணை நடத்திய சி.பி.ஐ., அதிகாரிகள், வழக்கை மூடி மறைக்க முயன்றதாக, அப்போதைய விருத்தாசலம் எஸ்.ஐ., தமிழ்மாறன் - தற்போது இன்ஸ்பெக்டராக உள்ள இவர், லஞ்சம் வாங்கியதாக கைதாகி, 'சஸ்பெண்டில்' உள்ளார்.
அப்போதைய விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் செல்லமுத்து - டி.எஸ்.பி.,யாகி ஓய்வு பெற்றுள்ளார். இவர்கள் இருவரையும் குற்றவாளிகளாக சேர்த்தனர்.மேலும் கண்ணகியின் தந்தை துரைசாமி, சகோதரர் மருதுபாண்டி உள்ளிட்ட 14 பேரை குற்றவாளிகளாக சேர்த்தனர். 660 பக்க குற்றப்பத்திரிகை யும் தாக்கல் செய்தனர்.

கடலுார் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி தனபால் முன்னிலையில், 2017ல் வழக்கு விசாரணைக்கு வந்தது. பின், எஸ்.சி., - எஸ்.டி., சிறப்பு நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டு நடந்தது.

நீதிபதி உத்தமராஜா தீர்ப்பு கூறினார்.முருகேசன் உறவினர்கள் அய்யாசாமி, 61, குணசேகரன், 59, ஆகியோர் மிரட்டப்பட்டு அழைத்து வரப்பட்டுஉள்ளனர். அவர்களுக்கு கொலையில் சம்பந்தம் இல்லாததால் விடுதலை செய்யப்பட்டனர். மீதமுள்ள 12 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார். கொலைக்கு முக்கிய காரணமான கண்ணகியின் சகோதரர் மருதுபாண்டியன், 46, என்பவருக்கு துாக்கு தண்டனை, 4.65 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தந்தை துரைசாமி, 68, மற்றும் உறவினர்கள் 45 - 66 வயதுள்ள எட்டு பேருக்கு ஆயுள் தண்டனை, தலா 4.15 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., செல்லமுத்து, 66, இன்ஸ்பெக்டர் தமிழ்மாறன், 51, ஆகியோருக்கு எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் ஆயுள் தண்டனையும், தலா 1.15 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.தண்டனை விதிக்கப்பட்டவர்கள், பலத்த பாதுகாப்புடன் கடலுார் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.


17 ஆண்டுகள் நடந்த வழக்கு

கண்ணகி - முருகேசன் கொலை சம்பவம், 2003 ஜூலை 8ல் நடந்தது; 17ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. 2004ல் சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றப்பட்டது. 2009 மார்ச் 9ல் சி.பி.ஐ., குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது, 2017ல் விசாரணை துவங்கியது.மிரட்டல் காரணமாக வழக்கின் முக்கிய சாட்சி செல்வராஜ், 2017 ஆக., 31ல் தற்கொலை செய்து கொண்டார். ஏப்., 4ம் தேதி விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது. இந்த வழக்கு 17 ஆண்டுகளை கடந்து முடிவுக்கு வந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X