கோர்ட் செய்தி

தமிழ்நாடு

இன்ஸ்பெக்டர் வசந்தி ஜாமின் மனு

Added : செப் 25, 2021
Share
Advertisement
மதுரை:பணம் பறிப்பு வழக்கில் கைதான இன்ஸ்பெக்டர் வசந்தி ஜாமின் மனுவை ஒத்தி வைத்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, வழக்கு ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. சிவகங்கை மாவட்டம், இளையாங்குடியைச் சேர்ந்த வியாபாரி அர்ஷத், பணத்தை இரட்டிப்பாக்கும் ஆசையில், 10 லட்சம் ரூபாயுடன் மதுரை நாகமலை புதுக்கோட்டை வந்தார். இன்ஸ்பெக்டர் வசந்தி மற்றும் அர்ஷத்தை அழைத்து வந்த நான்கு பேர் பணத்தை

மதுரை:பணம் பறிப்பு வழக்கில் கைதான இன்ஸ்பெக்டர் வசந்தி ஜாமின் மனுவை ஒத்தி வைத்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, வழக்கு ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

சிவகங்கை மாவட்டம், இளையாங்குடியைச் சேர்ந்த வியாபாரி அர்ஷத், பணத்தை இரட்டிப்பாக்கும் ஆசையில், 10 லட்சம் ரூபாயுடன் மதுரை நாகமலை புதுக்கோட்டை வந்தார். இன்ஸ்பெக்டர் வசந்தி மற்றும் அர்ஷத்தை அழைத்து வந்த நான்கு பேர் பணத்தை பறித்ததாக, குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்தனர். ஆக., 27ல் வசந்தி கைதானார். வசந்தி, 'கள்ளநோட்டை மாற்றுவதாக தகவல் வந்தது.

விசாரணைக்கு சென்றேன். பறிமுதல் செய்த பையில் பணம் எதுவும் இல்லை. இது போலீஸ் ஸ்டேஷன் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. உள்நோக்குடன் வழக்குப் பதியப் பட்டு உள்ளது. ஜாமின் அனுமதிக்க வேண்டும்' என உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார்.

நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.அரசுத் தரப்பு, 'மனுதாரர் விசாரணைக்கு ஒத்துழைக்க வில்லை. விசாரணை துவக்க நிலையில் உள்ளது. ஜாமின் அனுமதிக்கக் கூடாது' என ஆட்சேபித்தது. நீதிபதி உத்தரவு:விசாரணையை முறையாக நடத்தி, உண்மையை கண்டுபிடிக்க இந்நீதிமன்றம் விரும்புகிறது.

இந்நீதிமன்றம் கேள்வி எழுப்பிய பின்பே மனுதாரர் கைது செய்யப்பட்டுள்ளார். மனுதாரர் மற்றும் அவரது உறவினர்களின் சொத்து விபரங்கள் குறித்து விசாரிக்கப்பட்டதா என தெரியவில்லை.ஸ்டேஷன் கண்காணிப்பு கேமரா பதிவுகள், வழக்கு ஆவணங்களை செப்., 30ல் தாக்கல் செய்ய வேண்டும். மனுதாரர் தரப்பு ஆட்சேபனைகளை 'சீல்' இட்ட உறையில் வைத்து தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X