காஷ்மீர் விவகாரம் குறித்து தவறாக பேசிய பிரிட்டன் எம்.பி.,க்கு இந்தியா தரப்பில் கடும் கண்டனம்

Updated : செப் 25, 2021 | Added : செப் 25, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
லண்டன்-காஷ்மீர் விவகாரம் குறித்து, பிரிட்டன் பார்லிமென்டில் நடந்த அனைத்து கட்சி உறுப்பினர்கள் குழு விவாதத்தில், சில எம்.பி.,க்கள் தவறான முறையில் கருத்துகள் கூறியதற்கு, இந்தியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.பிரிட்டனின் அனைத்து கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டம், அந்த நாட்டு பார்லிமென்டில் நேற்று முன்தினம் நடந்தது.அதில், காஷ்மீரில் மனித உரிமை என்ற

லண்டன்-காஷ்மீர் விவகாரம் குறித்து, பிரிட்டன் பார்லிமென்டில் நடந்த அனைத்து கட்சி உறுப்பினர்கள் குழு விவாதத்தில், சில எம்.பி.,க்கள் தவறான முறையில் கருத்துகள் கூறியதற்கு, இந்தியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.



latest tamil news


பிரிட்டனின் அனைத்து கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டம், அந்த நாட்டு பார்லிமென்டில் நேற்று முன்தினம் நடந்தது.அதில், காஷ்மீரில் மனித உரிமை என்ற தலைப்பில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டது.அப்போது, ஆசிய விவகாரங்களுக்கான அமைச்சர் அமாண்டா மில்லிங் பேசுகையில், ''காஷ்மீர் பிரச்னையை தீர்க்க இந்தியா - பாகிஸ்தான் பேச்சு நடத்தி அரசியல் தீர்வு காண வேண்டும்.இந்த விவகாரத்தில் பிரிட்டன் தீர்வு சொல்லக் கூடாது,'' என்றார்.கூட்டத்தில் பங்கேற்ற பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த தொழிலாளர் கட்சி எம்.பி., நாஸ் ஷா என்பவர், சில தவறான கருத்துகளைத் தெரிவித்தார்.


latest tamil news


இதற்கு பதிலடி கொடுத்து, லண்டனில் உள்ள இந்திய துாதரக அதிகாரி பேசியதாவது:மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் குறித்து, மரியாதைக்குரிய இந்த சபையில் தரக்குறைவான கருத்துகள் தெரிவிக்கப்படுவது கண்டனத்துக்கு உரியது. இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி குறித்து கருத்து தெரிவிக்கையில், அதன் உண்மைத் தன்மை மற்றும் ஆதாரங்களைச் சரிபார்த்த பின்பே பேச வேண்டும். இதை சபையில் இதற்கு முன்னரும் வலியுறுத்தி உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
25-செப்-202114:45:06 IST Report Abuse
Vittalanand பிரிட்டிஷ் காரன் தான் நம்மை ஆண்டான். போகும் முன் இந்திய பாகிஸ்தான் என்று பிரித்தான். காஷ்மீர யாருக்கு சென்டஜம் என்றோ அது தனி நாடு என்றோ சொல்லவில்லை ஏன் .
Rate this:
Cancel
Soumya - Trichy,இந்தியா
25-செப்-202113:13:50 IST Report Abuse
Soumya இந்த பிச்சைக்கார பாக்கிகளின் பேச்சை நாம் செவிமடுக்க கூடாது
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
25-செப்-202108:55:40 IST Report Abuse
sankaseshan இருந்தும் மோசம் பண்ணினான் செத்த பின்னும் மோசம் பண்ணினான் என்று சொல்வதுபோல ,பிரிட்டிஷ்காரன் சுதந்தரதுக்கு முன்பும் பின்பு ம் கெடுக்கிறான் ,குள்ளநரிகள் ,போகும் முன் பிரிவினை செய்து ஹிந்து முஸ்லீம் பிளவை உண்டு பண்ணினான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X