சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போதை தந்தை அடித்து கொலை: மகன்கள் கைது

Added : செப் 25, 2021
Share
Advertisement
சேத்தியாத்தோப்பு,:மது போதையில் தகராறில் ஈடுபட்ட தந்தையை அடித்து கொலை செய்த மகன்களை, போலீசார் கைது செய்தனர். கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த கரைமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜவேல், 55; விவசாயி. இவர் அடிக்கடி குடித்து வந்து வீட்டில் தகராறு செய்தார். நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் போதையில் வந்த ராஜவேல், மகன்கள் ரகுவரன், 23; ராஜராஜசோழன் ஆகியோரிடம் தகராறு
 போதை தந்தை அடித்து கொலை: மகன்கள் கைது

சேத்தியாத்தோப்பு,:மது போதையில் தகராறில் ஈடுபட்ட தந்தையை அடித்து கொலை செய்த மகன்களை, போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த கரைமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜவேல், 55; விவசாயி. இவர் அடிக்கடி குடித்து வந்து வீட்டில் தகராறு செய்தார். நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் போதையில் வந்த ராஜவேல், மகன்கள் ரகுவரன், 23; ராஜராஜசோழன் ஆகியோரிடம் தகராறு செய்தார்.

ஆத்திரமடைந்த இருவரும் ராஜவேலை கட்டையால் தாக்கினர்.இதில் மயங்கிய ராஜவேலை, வீட்டிற்குள் துாக்கி போட்டனர். நேற்று காலை, ராஜவேல் இறந்து கிடந்தார். அவரது உடலை, மகன்கள் உடனடியாக அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.ராஜவேல் சகோதரி ராஜகுமாரி, சேத்தியாத்தோப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசார் கொலை வழக்கு பதிந்து, ரகுவரன், ராஜராஜ சோழனை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X