கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை துவக்க வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

Added : செப் 25, 2021
Share
Advertisement
மதுரை:தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் துவக்க நிலம் ஒதுக்க தாக்கலான வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. மதுரை வழக்கறிஞர் முகம்மது ரஸ்வி தாக்கல் செய்த பொதுநல மனு:கிராமப்புற ஏழைக் குழந்தைகளுக்கு சிறந்த கல்வியை வழங்க மத்திய அரசின் ஜவஹர் நவோதயா வித்யாலயா திட்டம் உள்ளது. இந்தியாவில் 661 நவோதயா பள்ளிகளில் 2 லட்சத்து 65

மதுரை:தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் துவக்க நிலம் ஒதுக்க தாக்கலான வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரை வழக்கறிஞர் முகம்மது ரஸ்வி தாக்கல் செய்த பொதுநல மனு:கிராமப்புற ஏழைக் குழந்தைகளுக்கு சிறந்த கல்வியை வழங்க மத்திய அரசின் ஜவஹர் நவோதயா வித்யாலயா திட்டம் உள்ளது. இந்தியாவில் 661 நவோதயா பள்ளிகளில் 2 லட்சத்து 65 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். தேர்ச்சி விகிதம் 98.50 சதவீதம். இப்பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடப்புத்தகம், சீருடை இலவசமாக வழங்கப்படுகிறது.

நுாலகம், விளையாட்டு மைதானம், ஆய்வுக்கூடங்களுடன் உண்டு உறைவிடப் பள்ளிகளாக உலகத்தரமான கல்வி வழங்கப்படுகிறது. இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் இக்கல்வித் திட்டத்தை ஏற்றுள்ளன. தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை துவக்கினால் கிராமப்புற ஏழை மாணவர்கள் பயனடைவர்.

இதற்காக ஒரு பள்ளிக்கு ரூ.20 கோடி வீதம் ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 30 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டியது மாநில அரசின் கடமை.மத்திய அரசின் பாடத்திட்டதை கற்கும்போது தேசிய போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள முடியும். நவோதயா கல்வித் திட்டத்தை ஏற்று பள்ளிகள் துவங்க நிலம் ஒதுக்கீடு செய்யக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு முகம்மது ரஸ்வி குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் அமர்வு விசாரித்தது.

தமிழக அரசுத் தரப்பு: இது அரசின் கொள்கை முடிவு சம்பந்தப்பட்ட விவகாரம். அரசியல் உள்நோக்கில் தமிழக முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர் பற்றி தவறான கருத்துக்கள் மனுவில் இடம் பெற்றுள்ளன. விளம்பரம் தேடும் நோக்கில் மனுதாரர் மனு செய்துள்ளார் என தெரிவித்தது.

திபதிகள்: தமிழக முதல்வரின் குடும்பத்தினர் பற்றி குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் கொண்ட பத்தியை நீக்கம் செய்து மனுதாரர் மனு செய்ய வேண்டும்.நவோதயா வித்யாலயா சமிதி தலைவர், தமிழக உயர்கல்வித்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை செயலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி 8 வாரங்கள் ஒத்தி வைக்கப்படுகிறது என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X