அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக தலைவர்களின் டுவிட்

Added : செப் 25, 2021
Share
Advertisement
முன்னேறிய ஜாதிகளை, இடஒதுக்கீடு பெறும் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளாக வழிந்து திணித்து, திராவிடத்தால் தான் அந்த ஜாதிகள் முன்னேற்றியது போல ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்வது தான் திராவிட சமூகநீதியின் பித்தலாட்டம். கிளார்க் வேலையில் சமூகநீதியை தேடுவார்களே தவிர, அதிகாரப்பகிர்வை பற்றி மூச்சு கூட வராது.- ஷியாம் கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் இளைஞரணி தலைவர்.முருகேசன் - கண்ணகி வழக்கின்

முன்னேறிய ஜாதிகளை, இடஒதுக்கீடு பெறும் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளாக வழிந்து திணித்து, திராவிடத்தால் தான் அந்த ஜாதிகள் முன்னேற்றியது போல ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்வது தான் திராவிட சமூகநீதியின் பித்தலாட்டம். கிளார்க் வேலையில் சமூகநீதியை தேடுவார்களே தவிர, அதிகாரப்பகிர்வை பற்றி மூச்சு கூட வராது.

- ஷியாம் கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் இளைஞரணி தலைவர்.

முருகேசன் - கண்ணகி வழக்கின் தீர்ப்பை உளமாற வரவேற்கிறேன். மனிதத்தைக் கொன்று ஜாதியத்தை நிலைநாட்ட, ஆணவப் படுகொலையில் ஈடுபட்ட வன்கொடுமையாளர்களைத் தண்டித்திருக்கும் இத்தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது. ஆணவப் படுகொலையை முற்றாக ஒழித்திட தனிச்சட்டமியற்ற வேண்டும்.

- சீமான், நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர்.

கொேரானா பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்க அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். மக்கள் விழிப்புணர்வோடு செயல்படுவது மட்டுமல்லாமல் மத்திய, மாநில அரசுகளின் கொரோனா கோட்பாடுகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும்

.- வாசன், த.மா.கா., தலைவர்.

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடனில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து தமிழக அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும்.

- வேல்முருகன்,

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X