பொது செய்தி

தமிழ்நாடு

பன்முக வித்தகர் எஸ்.பி.பி., முதலாமாண்டு நினைவு தினம் அனுசரிப்பு

Updated : செப் 25, 2021 | Added : செப் 25, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை: பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் முதலாமாண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.1969ல் சுசிலாவுடன் இணைந்து, 'இயற்கை என்னும் இளைய கன்னி...' எனும் முதல் பாடலை பாடினார். இப்படம் வெளிவரும் முன், 1969 மே 1ல் எம்.ஜி.ஆரின், அடிமைப்பெண் படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் பி.சுசிலாவுடன் இவர் பாடிய 'ஆயிரம் நிலவே வா...' பாடல், 'ஹிட்' ஆனது. இது தமிழில் இவரது முதல் பாடலாக

சென்னை: பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் முதலாமாண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.latest tamil news1969ல் சுசிலாவுடன் இணைந்து, 'இயற்கை என்னும் இளைய கன்னி...' எனும் முதல் பாடலை பாடினார். இப்படம் வெளிவரும் முன், 1969 மே 1ல் எம்.ஜி.ஆரின், அடிமைப்பெண் படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் பி.சுசிலாவுடன் இவர் பாடிய 'ஆயிரம் நிலவே வா...' பாடல், 'ஹிட்' ஆனது. இது தமிழில் இவரது முதல் பாடலாக அமைந்தது.

நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், 'டப்பிங் ஆர்டிஸ்ட்' என அனைத்திலும் முத்திரை பதித்த சாதனையாளர். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உட்பட 16 இந்திய மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்தவர்.துடிக்கும் கரங்கள், மயூரி, சிகரம், தையல்காரன், ஊர்பஞ்சாயத்து, உன்னைச் சரணடைந்தேன் உட்பட பல தமிழ் படங்களுக்கு இசையமைத்தார்.


latest tamil newsநிலவை மையமாக வைத்து பாடிய பாடல்கள், 'சூப்பர் ஹிட்' ஆனது. 'ஆயிரம் நிலவே வா, இளையநிலா பொழிகிறதே, வா வெண்ணிலா, நிலாவே வா, வண்ணம் கொண்ட வெண்ணிலவே, கண்ணுக்குள் நுாறு நிலவா, நிலவு துாங்கும் நேரம், பாடு நிலாவே, வெள்ளி நிலவே, வான் நிலா நிலா, வானிலே தேன் நிலா...' போன்ற பாடல்கள் ரசிகர்கள் நெஞ்சை விட்டு அகலாதவை.

பயோ டேட்டா

இயற்பெயர்: ஸ்ரீபதி பண்டிதரத்யுல பாலசுப்ரமணியம்

சினிமா பெயர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

புனைப்பெயர்: பாலு, எஸ்.பி.பி.,

பிறப்பு: 4.6.1946

பிறந்த இடம்: நெல்லுார், ஆந்திரா

சினிமா அனுபவம்: 1966--- 2020

மறைவு: 25.9.2020

துளிகள்

* சினிமாவிற்கு வருவதற்கு முன் இளையராஜா, கங்கை அமரன், பாஸ்கருடன் இணைந்து மெல்லிசைக் குழு ஒன்றை நடத்தினார்.

* கமல், ரஜினி, விஜயகாந்த் என, அவரவர் உச்சரிப்புக்கு தகுந்தவாறு பாடும் வல்லமை பெற்றவர்.

* கேளடி கண்மணியில் 'மண்ணில் இந்தக் காதல்...' அமர்க்களம் படத்தில், 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்...' பாடல்களை மூச்சுவிடாமல் பாடினார்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
CHARUMATHI - KERALA,இந்தியா
25-செப்-202112:28:49 IST Report Abuse
CHARUMATHI ONE YEAR GONE BUT STILL COULD NOT COME OUT OF THE GRIEF.
Rate this:
Cancel
Venkat, UAE - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
25-செப்-202111:34:26 IST Report Abuse
Venkat, UAE SPB தமிழர்களின் வாழ்வில் ஒரு அங்கம். இந்திய இசை உலகின் ஜாம்பவான். 40000 பாடல்களுக்கு மேல் பாடி மக்களின் மனதை கொள்ளை கொண்ட சாதனையாளர். இன்று அவர் நம்கூட இல்லையென்று நாம் நம்ப மறுப்பதுதான் பெரும் சோகம். இவர் நம்மை பொறுத்தவரை மறையவில்லை, தனது தெய்வீக குரலின் மூலம் நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார். இந்த பாடு நிலாவின் குரல் இன்னும் நூறு ஆண்டுகளுக்குமேல் ஒலித்துக்கு கொண்டிருக்கும்.
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
25-செப்-202111:29:33 IST Report Abuse
Mohan அவரை மறந்தவற்க்கு வேண்டுமானால் இன்று நினைவு நாளாக இருக்கலாம்.தினம் தினம் அவர் குரல் நம்காதில் ஒலிக்குது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X