நிஷாத் கட்சியுடன் பா.ஜ., கூட்டணி

Added : செப் 25, 2021
Share
Advertisement
லக்னோ:''உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் நிஷாத் கட்சியுடன் பா.ஜ., கூட்டணி அமைத்து போட்டியிடும்,'' என மாநில தேர்தல் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறி உள்ளார்.உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. இம்மாநில சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடக்கவுள்ளது. இதற்கான பா.ஜ., பொறுப்பாளராக, மத்திய

லக்னோ:''உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் நிஷாத் கட்சியுடன் பா.ஜ., கூட்டணி அமைத்து போட்டியிடும்,'' என மாநில தேர்தல் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறி உள்ளார்.

உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. இம்மாநில சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடக்கவுள்ளது. இதற்கான பா.ஜ., பொறுப்பாளராக, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இம்மாநிலத்தில் சஞ்சய் நிஷாத் தலைமையிலான நிஷாத் கட்சி என அழைக்கப்படும் 'நிர்பல் இந்தியன் ஷோஷித் ஹமாரா ஆம் தளம்' கடந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்திருந்தது.சஞ்சய் நிஷாத் மகன் பிரவீன் நிஷாத் போட்டி யிட்ட சாந்த் கபீர் நகர் தொகுதியில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் அடுத்தாண்டு நடக்கும் சட்டசபை தேர்தலிலும் நிஷாத் கட்சியுடன் கூட்டணி அமைக்க பா.ஜ., முடிவு செய்துள்ளது.இதுதொடர்பான அறிவிப்பை, லக்னோவில் சஞ்சய் நிஷாத் முன்னிலையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று வெளியிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X