சிறுமிக்கு திருமணம் போக்சோவில் 5 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமிக்கு திருமணம் போக்சோவில் 5 பேர் கைது

Added : செப் 25, 2021
Share
திருப்புத்துார் : எஸ்.புதுார் ஒன்றிய கிராமத்தில் 17 வயது சிறுமியை திருமணம் செய்தவர் உள்ளிட்ட 5 பேரை மகளிர் போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.எஸ்.புதுார் ஒன்றியம் விஜயபுரம் கிராமத்தைச் சேர்ந்த சின்னு மகன் வெள்ளைத்துரை 19. இவரது தாயார் சித்ரா மற்றும் கிராமத்தினர் சிலரும் சேர்ந்த பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை வெள்ளத்துரைக்கு மே 19ல் திருமணம் செய்து

திருப்புத்துார் : எஸ்.புதுார் ஒன்றிய கிராமத்தில் 17 வயது சிறுமியை திருமணம் செய்தவர் உள்ளிட்ட 5 பேரை மகளிர் போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

எஸ்.புதுார் ஒன்றியம் விஜயபுரம் கிராமத்தைச் சேர்ந்த சின்னு மகன் வெள்ளைத்துரை 19. இவரது தாயார் சித்ரா மற்றும் கிராமத்தினர் சிலரும் சேர்ந்த பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை வெள்ளத்துரைக்கு மே 19ல் திருமணம் செய்து வைத்துள்ளனர். சிறுமிக்கு தாய் இல்லை. தந்தைக்கு கண் பார்வை இல்லை.திருமணம் முடிந்த பின் சிறுமியிடம் பணம் கேட்டு வெள்ளத்துரை தொந்தரவு செய்துள்ளார். இதனால் சிறுமி தந்தை வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து திருப்புத்துார் மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. ஊர்நல அலுவலர் பெண் பிரிவைச் சேர்ந்த கயல்விழி புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சித்திரைச் செல்வி கிராமத்தினர் உள்ளிட்ட 9 பேர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து வெள்ளைத்துரை, தாயார் சித்ரா, ராசு, பழனியப்பன், சின்னத்தம்பி ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X