கூரியரில் போதை பொருட்கள் கடத்த முயன்ற இளைஞர்: திருச்சியில் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கூரியரில் போதை பொருட்கள் கடத்த முயன்ற இளைஞர்: திருச்சியில் கைது

Added : செப் 25, 2021
Share
திருச்சி:திருச்சியில் இருந்து விமான கூரியர் சர்வீஸ் மூலம் வெளிநாட்டுக்கு போதை பொருள் அனுப்ப முயன்றவர் கைது செய்யப்பட்டார்.திருச்சி விமானநிலையத்தில் செயல்படும் கூரியர் சர்வீஸ் மூலம் பார்சல் அனுப்ப வந்த நபரிடம் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.அவரிடம் வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக வைத்திருந்த 10 கிலோ பார்சலை சோதனையிட்டபோது அதில் ஒரு கோடி

திருச்சி:திருச்சியில் இருந்து விமான கூரியர் சர்வீஸ் மூலம் வெளிநாட்டுக்கு போதை பொருள் அனுப்ப முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி விமானநிலையத்தில் செயல்படும் கூரியர் சர்வீஸ் மூலம் பார்சல் அனுப்ப வந்த நபரிடம் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.அவரிடம் வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக வைத்திருந்த 10 கிலோ பார்சலை சோதனையிட்டபோது அதில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து அந்த நபரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருச்சி மாவட்டம் எட்டரை கோப்பு பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் 32 என்பது தெரிய வந்தது. மேலும் அவரது வீட்டிலும் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர் அங்கு ஏதும் சிக்கவில்லை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X