சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மது போதையில் விபத்து: ஐகோர்ட் வக்கீல் கைது

Added : செப் 25, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:மது போதையில் அதிவேகமாக காரை ஓட்டி இரண்டு மாணவர்கள் உட்பட நான்கு பேர் படுகாயமடைய காரணமான உயர்நீதிமன்ற வழக்கறிஞரை போலீசார் கைது செய்தனர். அவரது சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது.சென்னை எழும்பூர் காசா மேஜர் சாலையில் நேற்று முன்தினம் இரவு அதிவேகமாகவும் தாறுமாறாகவும் 'பென்ஸ்' சொகுசு கார் சென்றது.டான் பாஸ்கோ பள்ளி அருகே சென்ற போது ஓட்டுனர் கட்டுப்பாட்டை
 மது போதையில் விபத்து: ஐகோர்ட் வக்கீல் கைது

சென்னை:மது போதையில் அதிவேகமாக காரை ஓட்டி இரண்டு மாணவர்கள் உட்பட நான்கு பேர் படுகாயமடைய காரணமான உயர்நீதிமன்ற வழக்கறிஞரை போலீசார் கைது செய்தனர். அவரது சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை எழும்பூர் காசா மேஜர் சாலையில் நேற்று முன்தினம் இரவு அதிவேகமாகவும் தாறுமாறாகவும் 'பென்ஸ்' சொகுசு கார் சென்றது.டான் பாஸ்கோ பள்ளி அருகே சென்ற போது ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு இருசக்கர வாகனம் ஒரு ஆட்டோவில் மோதியதுடன் எதிர் திசையில் வந்த 'டாடா நானோ' கார் மீதுமோதி நின்றது.இந்த விபத்தில் மாணவர்கள் இருவர் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்தனர்.

அண்ணாசதுக்கம் போலீசார் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து விபத்து குறித்துவிசாரித்தனர்.இதில் அண்ணாநகர் 8வது பிரதான சாலையைச் சேர்ந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் 57 காரை ஓட்டியதும் அவர் மது அருந்தியிருந்ததும் தெரியவந்தது.நேற்று முன்தினம் இரவு நந்தனம்ஒய்.எம்.சி.ஏ.வில் நடந்த மது விருந்திற்கு சென்ற அவர் முழு போதையில் வாகனத்தை ஓட்டி வரும் போது விபத்தை ஏற்படுத்தி உள்ளார்.

அவரிடம் நடத்திய சோத னையில் அவர் மது அருந்தியது உறுதி செய்யப்பட்டது.தொடர்ந்து அவரை கைது செய்த அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சொகுசு காரையும்பறிமுதல் செய்தனர்.விபத்துக்குள்ளான நானோ காரில் யானை தந்தம் இருந்தது. எழும்பூர் போலீசார் அவற்றை பறிமுதல் செய்து விபத்தில் கால் எலும்பு முறிந்து மருத்துவமனையில் உள்ள கார் ஓட்டுனர் வில்சன் என்பவரிடம் அது குறித்துவிசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
25-செப்-202102:51:36 IST Report Abuse
BASKAR TETCHANA உண்மையிலே வக்கீல் தொழில் செய்பவர்கள் நியாத்திற்கும் நேர்மைக்கும் கட்டுப்பட்டு தொழில் செய்பவர்கள். மற்றவர்கள் முக்கியமாக அறிவாலய அடிமை வக்கீல்கள் தொழில் செய்ய வில்லை ஆதி தடி கட்ட பஞ்சாயத்து செய்வது விட்டு அவர்கள் கொடுக்கும் பணத்திற்கு ஆசைப்பட்டு பொய் குடித்துவிட்டு இது போன்ற நிகட்சைகள் நடத்துவார்கள். என்ன ஒரு தயிரியம் கட்சி இருக்கிறது நம்மை காப்பாற்றும் என்ற நம்பிக்கை.எனவே இவர்களை போன்றவர்களை பதவியில் வைக்க கூடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X