அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஏற்றுமதியில் தமிழகம் முதலிடம் பிடிக்கும் அமைச்சர் சாமிநாதன் உறுதி

Added : செப் 25, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
திருப்பூர்:ஏற்றுமதியில் நாட்டின் முதன்மை மாநிலமாக தமிழகம் மாறும் என அமைச்சர் சாமிநாதன் பேசினார்.வெளிநாட்டு வர்த்தகத்துறை இயக்குனரகம் (டி.ஜி.எப்.டி.) மற்றும் திருப்பூர் மாவட்ட தொழில் மையம் சார்பில் ஏற்றுமதியாளர் சங்கமம் நிகழ்ச்சி அவிநாசி ஐ.கே.எப். கண்காட்சி அரங்கில் நேற்று நடந்தது.கண்காட்சியை திறந்து வைத்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன்
 ஏற்றுமதியில் தமிழகம் முதலிடம் பிடிக்கும் அமைச்சர் சாமிநாதன் உறுதி

திருப்பூர்:ஏற்றுமதியில் நாட்டின் முதன்மை மாநிலமாக தமிழகம் மாறும் என அமைச்சர் சாமிநாதன் பேசினார்.

வெளிநாட்டு வர்த்தகத்துறை இயக்குனரகம் (டி.ஜி.எப்.டி.) மற்றும் திருப்பூர் மாவட்ட தொழில் மையம் சார்பில் ஏற்றுமதியாளர் சங்கமம் நிகழ்ச்சி அவிநாசி ஐ.கே.எப். கண்காட்சி அரங்கில் நேற்று நடந்தது.கண்காட்சியை திறந்து வைத்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது:

தொழில் துறையினர் நீண்டகாலமாக எதிர்பார்த்த மாநில ஏற்றுமதி கொள்கை வெளியிடப்பட்டு உள்ளது. இதனால் அன்னிய செலாவணியை அதிகளவில் ஈட்டமுடியும்; வேலைவாய்ப்பும் பெருகும். பஞ்சுக்கான ஒரு சதவீத வரி ரத்து செய்யப்பட்டுள்ளது.உலக சந்தையில் மதிப்பு கூட்டப்பட்ட ஆயத்த ஆடைகளின் தேவை அதிகரித்துள்ளது. செயற்கை இழை ஆடை ரகங்களை உற்பத்தி செய்யும் குறு சிறு நிறுவனங்களுக்கு தமிழக அரசு சிறப்பு மானியம் வழங்க உள்ளதால் மதிப்பு கூட்டு ஆடை ஏற்றுமதி அதிகரிக்கும்.

திருப்பூர் மாவட்டத்தில் மதிப்பு கூட்டப்பட்ட கயிறு பொருட்கள் தயாரிக்க ரூ.15 கோடி மதிப்பில் பொது பயன்பாட்டு மையம் அமைப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. தமிழக ஏற்றுமதி வர்த்தகம் வரும் 2030ல் 7.30 லட்சம் கோடி ரூபாய் என்ற இலக்கை எட்டிப்பிடிக்கும்.இவ்வாறு அமைச்சர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
25-செப்-202115:56:11 IST Report Abuse
vbs manian முதலில் என்ன இங்கு உற்பத்தி என்று சொல்லுங்கள். போராளிகள் இருக்கும் வரை ஒரு உற்பத்தியும் இல்லை.
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
25-செப்-202111:21:32 IST Report Abuse
elakkumanan பிடிக்கும் பிடிக்கும்.. சாராயம் ஏற்றுமதி செய்வதாக இருந்தால், டுமீல் பட்டி முதலிடம் பிடிக்கும்..ஆனால், சாராயம் இறக்குமதி செய்யும் மானஸ்தர்கள் ஆச்சே டுமீல் பட்டி... அய்யயோ.. வாய்ப்பு மிஸ் ஆகுதே.. எதுக்கும் மோடி ஒழிக ன்னு சொல்லி வைப்போம்... டுமீல், அவனா இதை மோடியோட தொடர்புபடுத்தி படித்து நம்பி நாசமா போவான்...
Rate this:
Cancel
Mohan - COIMBATORE,இந்தியா
25-செப்-202110:24:17 IST Report Abuse
Mohan கிழிக்கும்...மக்களே ஏற்றுமதி அப்பிடிங்கறது அவங்க பாஷையிலே கடத்தல்னு பெயர் ..மணல், ஜல்லி, TASMAC சரக்கு, இன்னும் பல...சொல்ல முடியாது முக்கியமா சிலை கடத்தல், உஷாரு உஷாரு..ஜெய் ஹிந்த் ...வாழ்க பாரதம், வாழ்க கொங்கு நாடு..செழிக்கட்டும் கருணாநிதி குடும்பம்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X