தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாம்

Added : செப் 25, 2021
Share
திருப்புல்லாணி : மத்திய அரசின் திட்டங்களில் ஒன்றான 15 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அடிப்படை எழுத்தறிவு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு எழுத்தறிவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.வட்டார வள மையம் சார்பில் திருப்புல்லாணி ஒன்றியத்துக்குட்பட்ட 27 மையங்களை சார்ந்த கல்வி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நடந்தது. வட்டார கல்வி அலுவலர்கள் வாசுகி,

திருப்புல்லாணி : மத்திய அரசின் திட்டங்களில் ஒன்றான 15 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அடிப்படை எழுத்தறிவு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு எழுத்தறிவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வட்டார வள மையம் சார்பில் திருப்புல்லாணி ஒன்றியத்துக்குட்பட்ட 27 மையங்களை சார்ந்த கல்வி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நடந்தது. வட்டார கல்வி அலுவலர்கள் வாசுகி, தங்ககனிமொழி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் திருக்குமார் வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கினர்.ஏற்பாடுகளை வட்டார வள மைய ஒருங்கிணைப்பாளர் தமிழ்மலர் செய்திருந்தார். ஆசிரியர் பயிற்றுநர்கள் முருகேஸ்வரி, வேல்ச்சாமி பயிற்சியளித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X