அரசியல் செய்தி

தமிழ்நாடு

கோவில் நகைகளை உருக்க பா.ஜ., எதிர்ப்பு

Updated : செப் 25, 2021 | Added : செப் 25, 2021 | கருத்துகள் (71)
Share
Advertisement
சென்னை-'கோவில் நகைகளை உருக்க முற்படுவதைக் கைவிட வேண்டும்' என, தமிழக பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் எம்.பி., கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:கோவில்களில் ஆண்டவனுக்கு வேண்டுதல் அடிப்படையிலும், நிறைவேறிய வேண்டுதலுக்காகவும், மாமன்னர் முதல், சாதாரண குடிமகன் வரை, அவரவர் விருப்பம், கலாசாரப்படி வழங்கிய நகைகளை, தமிழக அரசு உருக்க முடிவு எடுத்திருப்பது

சென்னை-'கோவில் நகைகளை உருக்க முற்படுவதைக் கைவிட வேண்டும்' என, தமிழக பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் எம்.பி., கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.



latest tamil news


அவரது அறிக்கை:கோவில்களில் ஆண்டவனுக்கு வேண்டுதல் அடிப்படையிலும், நிறைவேறிய வேண்டுதலுக்காகவும், மாமன்னர் முதல், சாதாரண குடிமகன் வரை, அவரவர் விருப்பம், கலாசாரப்படி வழங்கிய நகைகளை, தமிழக அரசு உருக்க முடிவு எடுத்திருப்பது ஏற்கத்தக்கது அல்ல.மிகப் பெரிய அநீதியும், வரலாற்று கொடுமையும் தமிழக கோவில்களுக்கு நடக்கின்றன. நினைத்து பார்க்க முடியாத கொடூரம் இது. மிகப் பெரிய வஞ்சனை இது.


latest tamil news


ஆப்கானிய தலிபான்களின் பாமியான் சிலை தகர்ப்புக்கும், இந்த திராவிட தலிபான்களின் நகை ஒழிப்புக்கும் வித்தியாசம் ஏதுமில்லை. ஹிந்து சமய கோவில்களின் இருப்பிடமாக கருதப்படும் மாநிலம் நம் தமிழகம்.தற்போதைய ஆட்சியின் தலைமை, மதச்சார்பற்ற அரசு என்ற முகமூடியை போட்டுக் கொண்டு, ஹிந்து மத கலாசார பண்பாட்டுச் சின்னங்களாக கருதப்படும் கோவில் நகைகளை உருக்க முற்படுவதை கைவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-செப்-202119:09:39 IST Report Abuse
பேசும் தமிழன் திமுக காரனுக்கும் கோவிலுக்கும் என்ன சம்பந்தம்.... எங்கே எதை அட்டைய போடலாம் என்று அலைகிறார்கள்... அவர்கள் வேண்டுமானால் சர்ச் மற்றும் மசூதி க்கு போய் அந்த வேலையை செய்யலாம்
Rate this:
Cancel
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
25-செப்-202115:11:52 IST Report Abuse
Raj 1.5 டன் திருப்பதி கோவில் தங்கத்தை உருக்கி தான் அரசு தங்க முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்திருக்கிறார்கள். அதை எந்த சங்கியும் குறை சொல்ல மாட்டான். ஏனென்றால், அவன் நோக்கம் சாமி நகை அல்ல, திமுகவை குறை சொல்ல வேண்டும்
Rate this:
Cancel
Duri Kuppusami - chennai ,இந்தியா
25-செப்-202114:40:32 IST Report Abuse
Duri Kuppusami தங்கத்தை மாற்றி ...மாற்றி ...மாற்றி ...மாற்றி என்ன சொல்வது ஆண்டவன் ஒருவனே காப்பாற்ற முடியும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X