பொது செய்தி

தமிழ்நாடு

தீயணைப்பு வீரர் பாதுகாப்பு ஆடைக்கு ஐ.எஸ்.ஐ., உரிமம்..

Updated : செப் 25, 2021 | Added : செப் 25, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை--தீயணைப்பு வீரர்களுக்கான பாதுகாப்பு ஆடை தயாரிப்பில், அகில இந்திய அளவில் முதல் ஐ.எஸ்.ஐ., தரச் சான்றிதழ் உரிமத்தை, இந்திய தர நிர்ணய அமைவனத்தின், சென்னை கிளை அலுவலகம் வழங்கி உள்ளது.பி.ஐ.எஸ்., என்ற, இந்திய தர நிர்ணய அமைவனம், பொருட்களுக்கான தர உரிமம், மேலாண்மை திட்ட சான்றிதழ், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், கலை பொருட்களுக்கான 'ஹால்மார்க்' உரிமம் உட்பட, ஐ.எஸ்.ஐ., தரச்

சென்னை--தீயணைப்பு வீரர்களுக்கான பாதுகாப்பு ஆடை தயாரிப்பில், அகில இந்திய அளவில் முதல் ஐ.எஸ்.ஐ., தரச் சான்றிதழ் உரிமத்தை, இந்திய தர நிர்ணய அமைவனத்தின், சென்னை கிளை அலுவலகம் வழங்கி உள்ளது.



latest tamil news


பி.ஐ.எஸ்., என்ற, இந்திய தர நிர்ணய அமைவனம், பொருட்களுக்கான தர உரிமம், மேலாண்மை திட்ட சான்றிதழ், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், கலை பொருட்களுக்கான 'ஹால்மார்க்' உரிமம் உட்பட, ஐ.எஸ்.ஐ., தரச் சான்றிதழ்களை வழங்கி வருகிறது.இந்நிலையில், தீயணைப்பு வீரர்களுக்கான பாதுகாப்பு ஆடை தயாரிப்புக்கு, ஐ.எஸ்., 16890: 2018ன் படி, ஒரு தர நியமத்தை உருவாக்கி உள்ளது.

இதன்படி, ஐ.எஸ்.ஐ., தரத்திற்கேற்ப, தீயணைப்பு வீரர்களுக்கான பாதுகாப்பு ஆடையை, 'சிஸ்டம் 5 எஸ்' என்ற நிறுவனம் உருவாக்கி உள்ளது. இந்த நிறுவனம் உருவாக்கிய பாதுகாப்பு ஆடை, தீ விபத்துகள், அதனுடன் தொடர்புடைய செயல்பாடுகளை எதிர்த்து போராடுகிறது. வெப்பம் மற்றும் தீப்பிழம்புகள் போன்ற அபாயம் ஏற்படாத வகையிலும், உயிரைக் காக்கும் நோக்கிலும், இந்த உடை தயாரிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


ஐ.எஸ்., 16890: 2018ன் படி, தீயணைப்பு வீரர்களுக்கான பாதுகாப்பு உடை தயாரிப்பதற்கான அகில இந்திய முதல் உரிமம், 'சிஸ்டம் 5 எஸ்' என்ற நிறுவனத்திற்கு நேற்று வழங்கப்பட்டது. இந்த உரிமத்தை, தமிழக தீயணைப்புத் துறை கூடுதல் இயக்குனர் எஸ்.விஜயசேகர் வழங்கினார்.விழாவில், இந்திய தர நிர்ணய அமைவன துணை தலைமை இயக்குனர் யு.எஸ்.பி.யாதவ், சென்னை கிளை தலைவர் ஜி.பவானி, 'சிஸ்டம் 5 எஸ்' நிறுவன இயக்குனர் சுதிர் தக்கெர், சென்னை விமான நிலைய துணை பொது மேலாளர் ஜே.ஆர்.சிங் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-செப்-202106:54:23 IST Report Abuse
Taas Vyas முதல்ல இந்த ஐ எஸ் ஓ டி யு வி போன்ற வெட்கங்கெட்ட தரச்சான்றுகளை அழித்தொழிக்க வேண்டும்-வீணே மகா மட்டமான பொருட்களை விற்பனை செய்ய அனுமதி பெற லஞ்சத்தை ஊற்றாக்குவதற்காக கச்டுபிடிக்கப்பட்ட நவீன கொள்ளைத்.தொழிலே இவை-இதில் அரசே ஈடுபட்டிருப்பதால் தான் கேஜி ஆசுபத்திரி பிச்சைக்காரன் அவ்வாறு திமிறெடுத்து பேசுகிறான் கொள்ளையடிப்பேன் நீ யார் கேட்க என-சீ மக்களாட்சியை நினைத்தால் கக்கூஸின் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை இயக்குநர் சங்கர் கூறியது போல.
Rate this:
Cancel
Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ
25-செப்-202103:06:08 IST Report Abuse
Sankar Ramu அருமை. வாழ்த்துக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X