பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

Added : செப் 25, 2021
Share
Advertisement
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் வீடியோ கான்பிரன்சிங்' முறையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. ஒன்றிய வாரியாக விவசாயிகளை அழைத்து வீடியோ கான்பிரன்சிங்' வழியாக குறைகளை கலெக்டர் மதுசூதன் ரெட்டி கேட்டறிந்தார்.இக்கூட்டத்திற்கு விவசாய இணை இயக்குனர் வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார். நேர்முக உதவியாளர் (விவசாயம்) சர்மிளா வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர்
விவசாயிகள் குறைதீர் கூட்டம்


சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் வீடியோ கான்பிரன்சிங்' முறையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது.

ஒன்றிய வாரியாக விவசாயிகளை அழைத்து வீடியோ கான்பிரன்சிங்' வழியாக குறைகளை கலெக்டர் மதுசூதன் ரெட்டி கேட்டறிந்தார்.இக்கூட்டத்திற்கு விவசாய இணை இயக்குனர் வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார். நேர்முக உதவியாளர் (விவசாயம்) சர்மிளா வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், கூட்டுறவு இணை பதிவாளர் ரவிச்சந்திரன், அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் அழகர்சாமி பங்கேற்றனர்.அய்யாச்சாமி, இளையான்குடி: வைகை அணையில் தண்ணீர் திறந்ததும் 3 வது ரீச் பகுதியான பார்த்திபனுார் மதகணைக்கு தான் தண்ணீர் வந்து சேர வேண்டும். இதன் மூலம் இளையான்குடியில் 44 கண்மாய்கள் நிரம்பி 13,500 ஏக்கர் பாசன வசதி பெறும். எனவே பார்த்திபனுார் மதகணைக்கு தண்ணீர் வந்து சேர நடவடிக்கை எடுக்க வேண்டும்.சி.சுப்பிரமணி, சிங்கம்புணரி: உழவர் சந்தையில் கடைகள் அதிகம் உள்ளன.

ஆனால் காய்கறிகளை விவசாயிகள் கொண்டு வருவதில்லை.மாறாக நடைபாதை கடைகள் அமைத்து போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகின்றனர். அக்கடைகளை நிரந்தரமாக உழவர் சந்தைக்குள் கொண்டுவர வேண்டும்.கலெக்டர்: தேவகோட்டை ஆர்.டி.ஓ., மற்றும் வேளாண் வணிக துணை இயக்குனர் இணைந்து ரோட்டோர கடைகளை உழவர் சந்தைக்குள் கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்பார்கள்.போஸ், புல்லுக்கோட்டை: மறவமங்கலம் தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர் கடன் தருவதில்லை. புல்லுக்கோட்டைக்கு காவிரி கூட்டு குடிநீர் வந்து 6 மாதங்களுக்கு மேலாகிறது.அய்யாச்சாமி, இளையான்குடி: பிராந்தமங்கலம் குடிநீர் தொட்டியில் இருந்து வழங்கப்படும் காவிரி கூட்டு குடிநீர் மேலாயூர், விஜயன்குடி, எஸ்.காரைக்குடி, கீழநெட்டூர் கிராமங்களுக்கு வருவதில்லை.

மாறாக திருவேங்கடத்தில் உள்ள காவிரி குடிநீர் தொட்டியில் இருந்து இக்கிராமங்களுக்கு குடிநீர் வழங்கலாம்.கலெக்டர்: காவிரி குடிநீர் திட்ட குழாய்கள் புதுப்பிக்கும் பணி நடக்கிறது. அப்பணிக்கிடையே விடுபட்ட கிராமங்களுக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.கலெக்டர்: மாவட்டத்தில் விரும்பும் விவசாயிகளின் நிலங்களில் வேலை உறுதி திட்ட ஊழியர்களை வைத்து பண்ணை குட்டைகள் அமைத்து தரப்படும். விருப்பம் உள்ள விவசாயிகள் அந்தந்த பகுதி உதவி இயக்குனர்களை அணுகலாம். திருவண்ணாமலை மாவட்டத்தில் இத்திட்டம் வெற்றி பெற்றுள்ளது.சுப்பிரமணியன், இளையான்குடி: தாயமங்கலம் விலக்கு ரோட்டில் உள்ள மறவமங்கலம் வழியே செல்லும் டவுன் பஸ்களை கீழத்துறையூரில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல வேண்டும்.

கலெக்டர்: கட்டாயம் அந்த வழியாக செல்லும் அனைத்து டவுன் பஸ்களையும் கீழத்துறையூரில் நிறுத்தி செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

சிவகங்கை : 'வைகை அணையில் இருந்து பூர்வீக வைகை பாசன பகுதியான 3ம் ரீச்சுக்கு தண்ணீர் வந்து சேர்வதில்லை,'' என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X