பொது செய்தி

இந்தியா

ஜிப்மரில் புதிய இலவச சிகிச்சை திட்டம் திரும்பப் பெற எம்.பி., வலியுறுத்தல்

Added : செப் 25, 2021
Share
Advertisement
வானுார்-ஜிப்மர் மருத்துவமனையில் 2,499 ரூபாய்க்கு, கீழ் வருமானம் உள்ளவர்களுக்கு மட்டும் இலவச சிகிச்சை வழங்கப்படும் என்ற உத்தரவை திரும்ப பெற வேண்டும் என ரவிக்குமார் எம்.பி., வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை:புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மாதம் 2,499 ரூபாய்க்கு கீழ் வருமானம் உள்ளவர்களுக்கு மட்டும்தான் இலவச சிகிச்சை அளிக்கப்படும். வெளிப்புற நோயாளியாக சிகிச்சைபெற

வானுார்-ஜிப்மர் மருத்துவமனையில் 2,499 ரூபாய்க்கு, கீழ் வருமானம் உள்ளவர்களுக்கு மட்டும் இலவச சிகிச்சை வழங்கப்படும் என்ற உத்தரவை திரும்ப பெற வேண்டும் என ரவிக்குமார் எம்.பி., வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை:புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மாதம் 2,499 ரூபாய்க்கு கீழ் வருமானம் உள்ளவர்களுக்கு மட்டும்தான் இலவச சிகிச்சை அளிக்கப்படும். வெளிப்புற நோயாளியாக சிகிச்சைபெற வருபவர்கள் தங்களது வருமானத்தை நிரூபிக்க ரேஷன் கார்டை கையோடு எடுத்துவர வேண்டும் என ஜிப்மர் மருத்துவமனை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.சிகிச்சை பெற வரும் நோயாளி கையோடு ரேஷன் கார்டை எடுத்துவர வேண்டும் என்பது நடைமுறை சாத்தியமற்றது மட்டுமின்றி சட்ட விரோதமானது.எல்லாவிதமான சிகிச்சைகளுக்கும் இனி கட்டணம் வசூலிக்கப்படும் என்பதையே இந்த அறிவிப்பு காட்டுகிறது.உத்தரவைப் பிறப்பித்த இயக்குனரை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த உத்தரவை உடனே திரும்பப்பெற வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X