பொது செய்தி

தமிழ்நாடு

மேஸ்திரி மனைவி கொலை: கொத்தனாருக்கு ஆயுள் : கடலூர் மகிளா கோர்ட் தீர்ப்பு

Added : செப் 25, 2021
Share
Advertisement
கடலுார்-நகைக்காக கட்டட மேஸ்திரி மனைவியை கொலை செய்த வழக்கில் கொத்தனாருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலுார் மகிளா கோர்ட் தீர்ப்பு கூறியது.கடலுார், குண்டு உப்பலவாடியைச் சேர்ந்தவர் கோபால், 46; கட்டட மேஸ்திரி. இவரிடம், கடலுார், புதுப்பாளையத்தைச் சேர்ந்த மணி, 46; என்பவர் கொத்தனார் வேலை செய்தார். இதன் காரணமாக கோபால் வீட்டிற்கு மணி அடிக்கடி வந்து செல்வது வழக்கம்.2018 அக்., 16ம் தேதி

கடலுார்-நகைக்காக கட்டட மேஸ்திரி மனைவியை கொலை செய்த வழக்கில் கொத்தனாருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலுார் மகிளா கோர்ட் தீர்ப்பு கூறியது.கடலுார், குண்டு உப்பலவாடியைச் சேர்ந்தவர் கோபால், 46; கட்டட மேஸ்திரி. இவரிடம், கடலுார், புதுப்பாளையத்தைச் சேர்ந்த மணி, 46; என்பவர் கொத்தனார் வேலை செய்தார். இதன் காரணமாக கோபால் வீட்டிற்கு மணி அடிக்கடி வந்து செல்வது வழக்கம்.2018 அக்., 16ம் தேதி காலை 10:00 மணிக்கு கோபால் வீட்டின் முன்பக்க கதவு தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. அவரது மனைவி சங்கீதா வீட்டு தோட்டத்தில் துணி துவைத்தார். முன்பக்க கதவு பூட்டியிருந்ததால் பக்கவாட்டு வழியாக வீட்டு தோட்டத்திற்கு சென்ற மணி, சங்கீதாவிடம் கோபால் மட்டப் பலகை வாங்கி வருமாறு கூறியதாக தெரிவித்தார். சங்கீதா மட்டப்பலகை எடுக்க வீட்டிற்குள் சென்றார். அவரை பின் தொடர்ந்து சென்ற மணி, மறைத்து வைத்திருந்த கத்தியால் சமையலறையில் சங்கீதாவின் கழுத்தை அறுத்து ஆறரை சவரன் தாலிச் செயினை பறித்தார். அந்த தாலிச் செயினை புதுப்பாளையம் நகைக் கடையில் அடகு வைத்தார்.இது குறித்து கடலுார், தேவனாம்பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து மணியை கைது செய்தனர்., நகை அடகு பணம் ரூ. 43 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மேலும், அவரை கடலுார் மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி வழக்குத் தொடர்ந்தனர். வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.நீதிபதி பாலகிருஷ்ணன், இவ்வழக்கில் தொடர்புடைய மணிக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அரசு தரப்பில் வக்கீல் செல்வ பிரியா ஆஜரானார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X