சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுபோதையில் தகராறு செய்த தந்தை அடித்துக் கொன்ற மகன்கள் கைது

Added : செப் 25, 2021
Share
Advertisement
சேத்தியாத்தோப்பு-மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட தந்தையை தாக்கி கொலை செய்த மகன்களை போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த கரைமேடு சோழன் தெருவைச் சேர்ந்தவர் ராஜவேல், 55;விவசாயி. இவர் அடிக்கடி குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களிடம் தகராறு செய்தார். நேற்று முன்தினம் இரவு 10.00 மணியளவில் குடிபோதையில் வந்த ராஜவேல் தனது மகன்கள் ரகுவரன், 23;

சேத்தியாத்தோப்பு-மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட தந்தையை தாக்கி கொலை செய்த மகன்களை போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த கரைமேடு சோழன் தெருவைச் சேர்ந்தவர் ராஜவேல், 55;விவசாயி. இவர் அடிக்கடி குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களிடம் தகராறு செய்தார். நேற்று முன்தினம் இரவு 10.00 மணியளவில் குடிபோதையில் வந்த ராஜவேல் தனது மகன்கள் ரகுவரன், 23; ராஜராஜசோழன் ஆகியோரிடம் தகராறு செய்தார். ஆத்திரமடைந்த இருவரும் ராஜவேலை கட்டையால் தாக்கினர்.இதில் மயங்கிய ராஜவேலை மகன்கள் வீட்டிற்குள் துாக்கி வந்து போட்டுவிட்டுச் சென்றனர். நேற்று காலை பார்த்த போது ராஜவேல் இறந்து கிடந்தார். அவரது உடலை மகன்கள் உடனடியாக அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர். இது குறித்து கரைமேடு மெயின் ரோட்டில் வசித்து வரும் ராஜவேல் சகோதரி ராஜகுமாரி சேத்தியாத்தோப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.ராஜகுமாரி புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் கொலை வழக்குப் பதிந்து ரகுவரன், ராஜராஜசோழனை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X