சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டாஸ்மாக் மேலாளர் திட்டியதால் முதியவர் தற்கொலை முயற்சி

Added : செப் 25, 2021
Share
Advertisement
ஸ்ரீமுஷ்ணம் -ஸ்ரீமுஷ்ணத்தில் டாஸ்மாக் மேலாளர் அவமானப்படுத்தியதால் மனமுடைந்த முதியவர் தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் - ஆண்டிமடம் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் நேற்று முன்தினம் இரவு டாஸ்மாக் மேலாளர் ரவிக்குமார் திடீர் ஆய்வு செய்தார். அந்த கடை அருகே நெசவாளர் காலனியைச் சேர்ந்த சண்முகசுந்தரம், 70;

ஸ்ரீமுஷ்ணம் -ஸ்ரீமுஷ்ணத்தில் டாஸ்மாக் மேலாளர் அவமானப்படுத்தியதால் மனமுடைந்த முதியவர் தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் - ஆண்டிமடம் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் நேற்று முன்தினம் இரவு டாஸ்மாக் மேலாளர் ரவிக்குமார் திடீர் ஆய்வு செய்தார். அந்த கடை அருகே நெசவாளர் காலனியைச் சேர்ந்த சண்முகசுந்தரம், 70; என்பவர் சுண்டல், பிளாஸ்டிக் டம்ளர், வாட்டர் பாட்டில் விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனை மேலாளர் ரவிக்குமார் கண்டித்தார். டாஸ்மாக் மேற்பார்வையாளர் மயில்வாகனன் மூலம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் டாஸ்மாக் கடை அருகே அனுமதியின்றி பொருட்கள் விற்றதாக சண்முகசுந்தரம் மீது போலீசார் வழக்குப் பதிந்து பின் விடுவித்தனர்.நேற்று காலை ஆண்டிமடம் செல்லும் சாலையில் உள்ள தேக்கு தோப்பில் தனியாக அமர்ந்திருந்த சண்முக சுந்தரம் பிராந்தியில் பூச்சி மருந்து கலந்து குடித்தார். இதை பார்த்தவர்கள் அவரை விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். டாஸ்மாக் மேலாளர் ரவிக்குமார் ஆபாசமாக திட்டி, தாக்கியதால் தற்கொலைக்கு முயன்றதாக சண்முக சுந்தரம் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X